TamilSaaga

புக்கிட் மேரா வியூ ப்ளாக்கில் 84 வயது மூதாட்டி மரணம்… 36 ஆக உயர்ந்தது கோவிட் உயிரிழப்பு

சிங்கப்பூர் புக்கிட் மேரா வியூ ப்ளாக்கில் உள்ள 84 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.

ஜீன்.15 அன்று புக்கிட் மேரா வியூவின் ப்ளாக் எண்கள் 115 மற்றும் 116 ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பு சோதனையில் இந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஏற்கனவே புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கொழுப்பு போன்ற நோய்கள் இருந்ததால் இவருக்கு தடுப்பூசி வழங்கவில்லை.

மேலும் இவரது இல்லத்தில் பணிபுரிந்த இந்தோனேசியாவை சேர்ந்த 36 வயதுள்ள பணிப்பெண் ஏற்கனவே கொரோனா உறுதிசெய்யப்பட்டு அவரது தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த மாதத்தில் இதுவரை 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தேசிய தொற்றுநோய் நிலையமானது இந்த மூதாட்டியின் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

Related posts