சிங்கப்பூர் உண்மையில் ஒரு நல்ல (Fine) நாடு தான். ஆனால், இங்குள்ள விதிமுறைகள் முழுதாக தெரியாமல் கோக்குமாக்கு வேலைகளில் ஈடுபட்டால் கடுமையான அபராதங்கள் (Fine) செலுத்த நேரிடும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இல்லாத அல்லது சரியாக பின்பற்றப்படாத விஷயங்கள் இங்கு கடுமையாக பின்பற்றவைக்கப்படும். இதனால் தான் சிங்கப்பூர் என்றாலே இன்னமும் பல வெளிநாட்டினர் மத்தியில் ஒரு ஆச்சர்யம் ஏற்படுகிறது.
சரி.. இந்த கட்டுரையில் நீங்கள் சிங்கப்பூரில் கட்டாயம் செய்யக்கூடாத அல்லது ஈடுபடக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Chewing gum
சிங்கப்பூரில் chewing gum வாங்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ தடை உள்ளது. உங்களிடம் chewing gum இருந்தால், அதை நீங்கள் நிச்சயமாக தெருக்களில் துப்ப முடியாது. நீங்கள் துப்பினால் $500 (ரூ. 23,121) அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், விதிவிலக்குகள் உள்ளன. 2004 முதல், குணப்படுத்தும் நோக்கங்களுக்காக chew gum தேவைப்படுபவர்கள் மற்றும் அதற்கான மருத்துவ பரிந்துரைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆபாசம்
உங்கள் வீட்டிற்கு வெளியே ஜஸ்ட் நிர்வாணமாக நீங்கள் இருப்பது தெரிந்தால் கூட, உங்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், அடல்ட் படங்களைப் பார்த்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
குப்பை
எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டினால் $1,000 (ரூ. 46,242) அபராதம் விதிக்கப்படும்.
சிகரெட்
பொது இடத்தில் புகைபிடித்தால் $200 அபராதம் செலுத்த வேண்டும். உஷாரா இருங்க.
கிறுக்கல்
சிங்கப்பூரில் எந்தச் சுவரிலும் ‘கவிதா.. ஐ லவ் யூ’ என்று மறந்தும் கூட பழக்க தோஷத்தில் எழுதியோ, கிறுக்கியோ வைத்துவிடாதீர்கள். இதற்கு பிரம்படி மற்றும் சிறைத் தண்டனை கிடைக்கலாம்,
போதை மருந்துகள்
சிங்கப்பூரில் இருக்கும்போது போதைப்பொருள் பற்றிய நினைப்பே வரக்கூடாது. கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
Flush முக்கியம் நண்பா!
நீங்கள் பொது கழிப்பறையைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய மறந்துவிட்டால், உங்களுக்கு $150 (ரூ. 6,936) அபராதம் விதிக்கப்படும்.
இதனால் தான் சிங்கப்பூர் என்றால் இன்னமும் பிரமிப்பும், ஆர்வமும் ஏற்படுகிறது. சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அதன் சட்டதிட்டங்களையும் பின்பற்றுவதும் முக்கியம். அதை செவ்வனே செய்து வருகிறது சிங்கை அரசு!.