TamilSaaga

“முதலில் மகள் அடுத்து பேத்தி” – 65 வயது காமக்கொடூரனுக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மேலும் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை தனது பேத்தியிடன் தவறாக நடந்துகொண்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டில், தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செலுத்த குற்றத்திற்காக அந்த நபர் 12 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றும் பல பாலியல் குற்றங்களுக்காக 12 முறை பிரம்படியும் அந்த நபருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்தபோது அவருடைய மகளுக்கு வயது 14 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை, 65 வயதான அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனையில் 6 பிரம்படிக்கு பதிலாக மூன்று மாதங்கள் கூடுதலாக சிறைசெல்ல தீர்ப்பிடப்பட்டார். சிங்கப்பூர் சட்டத்தின்படி, 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குற்றவாளிகளை பிரம்படி மூலம் தண்டிக்க முடியாது.

மூன்று விதமான அடக்குமுறை மற்றும் ஒரு சிறாருடன் பாலியல் தொடர்பு கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்காக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இதே போன்ற ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முறை அந்த ஆசாமி தனது பேதியை பாலியல் ரீதியாக துன்புருத்தியது தெரியவந்துள்ளது.

Related posts