சிங்கப்பூரில் 62 வயது முதியவர் பெருந்தொற்று காரணமாக மரணித்த நிலையில் சிங்கப்பூரின் 57வது பெருந்தொற்று மரணம் பதிவாகியுள்ளது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சமூக வழக்குகளின் எண்ணிக்கை புதிய தினசரி உச்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH)நேற்று வியாழக்கிழமை (செப் 9) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த திங்களன்று (செப் 6) கோவிட் -19 சிக்கல்களால் அவர் இறந்துள்ளார். பெருந்தொற்று வழக்கு என் 65636 என அறியப்பட்ட அந்த மனிதருக்கு கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நுரையீரல் பகுதியில் புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் கடந்த ஜூலை 20 அன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் அடுத்த நாள் அவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேற்பட்ட 108 முதியவர்கள் உட்பட 450 பேருக்கு கடந்த விலாயக்கிழமை புதிதாக தொற்று பரவியுள்ளது. மேலும் நேற்று வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 7 பேருக்கு தொற்று உறுதியானது.