TamilSaaga

உணவகத்தில் சாப்பிட்ட தட்டை அப்புறப்படுத்தாவிட்டால் அபராதம் – சுற்றுப்புறத் துறை

சிங்கப்பூரில் ஜூன் 14ம் தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக கடந்த ஜீன்.21 தேதி மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் ஜூன் 21 முதல் இரண்டு பேர் கொண்ட குழுவாக மேசைகளில் அமர்ந்து உணவு மற்றும் பானங்கள் சாப்பிட உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொது இடம் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் சாப்பிட்ட பிறகு தட்டுகளை அப்புறப்படுத்துவது, மீதமுள்ள உணவை தூய்மை செய்வது போன்ற பல விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றுப்புற துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிறகு உணவு அருந்திய பெரும்பாலோனோர் புதிய விதியை பின்பற்றாத நிலை காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து முறையாக விதியை கடைபிடிக்காத சுமார் 4500 பேருக்கு சுற்றுப்புறத்துறை ஒரு நினைவூட்டலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செப்டம்பர் மாதம் முதல் விதியை மீறுகின்றவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தொடர்ந்து மீறுபவர்களுக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுப்புறத்துறை தெரிவித்துள்ளது.

Related posts