பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு, சிங்கப்பூர் தனது எல்லைகளை திறந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள், வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கைக்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, தற்போது போலி டிராவல் ஏஜெண்ட் வெப்சைட்டுகள் பயணிகள் பணத்தை திருட பக்காவாக கிளம்பியுள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் போலீஸ் நேற்று (ஜுன்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூரில் பயணம் தொடர்பான மோசடிகளில் குறைந்தது 35 பேர் கிட்டத்தட்ட $34,000 டாலரை இழந்துள்ளனர்.
போலியான டிராவல் ஏஜெண்ட் இணயைத்தளங்களை உருவாக்கி இவற்றின் மூலமாக விசா விண்ணப்பம், நுழைவு விண்ணப்பம், விமான டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை மோசடிக்காரர்கள் வழங்குகின்றனர். இவை அனைத்தும் உண்மை என்று நம்பும் பயணிகள், தங்கள் வங்கி தகவல்களை அதில் பதிவு செய்துகொண்டனர். பிறகு, டிராவல் ஏஜெண்டிடமிருந்து அடுத்தக்கட்ட தகவல்கள் கிடைக்காத சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டனர்.
பிறகு தான் தாங்கள் ஏமாற்றுப்பட்டுள்ளோம் என்ற உண்மையே அவர்களுக்கு தெரியவந்தது.
டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு, அங்கீகாரம் பெற்ற டிக்கெட் ஏஜென்ட்டா என்பதை அறிய, பொதுமக்கள் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் சிங்கப்பூர் தேசிய சுற்றுலா முகவர் சங்கத்தை தொடர்பு கொண்டு பயணிகள் சரிபார்க்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகாரளிக்க வேண்டுமெனில், 1800-255-0000 என்ற போலீஸ் அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஸ்கேம் எச்சரிக்கை இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது 1800-722-6688 என்ற Anti-Scam Hotline நம்பருக்கு அழைக்கவும்.