TamilSaaga

மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து : 3 பேர் பலி – ஆய்வு நடத்தும் மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் 5 நாட்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 3 பணியாளர்கள் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் இறந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி ஒருவரும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டின் அரையாண்டு விகிதத்தை கணக்கிடும்போது இந்த 2021ம் ஆண்டு அதிக அளவில் பணியிடங்களில் விபத்துக்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக உயரமான இடத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகும் பணியாளர்களின் என்னைகை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பணியிடங்களில் பணியாளர்களுக்கு குறிப்பாக மீக உயரமான இடங்களில் வேலை செய்பவர்களுக்கு 100 சதவிகித பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த சில நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த மூன்று விபத்து சம்பவங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்துவருகிறது மனித வள அமைச்சகம். வெளிநாட்டு தொழிலார்கள் நலனில் பெரிய அளவில் அக்கறையோடு செயல்படும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts