TamilSaaga

சிங்கப்பூரில் 999க்கு அழைத்தால் காணொளி வழியாக உதவி – விரைவில் நடைமுறைக்கு வரும் சேவை

சிங்கப்பூர் காவல்துறை தொழில்நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து அதனுடைய செயல் திறன்களை மேம்படுத்தி சிங்கப்பூர் மக்களுக்கு இன்னும் சிறப்பான வகையில் சேவையாற்றும் என்று சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் இன்னும் அதிகமான அளவில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் இணைய குற்றங்கள், நிதித்துறையில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூர் காவல்துறை நடத்திய வருடாந்திர வேலைத்திட்ட கருத்தரங்கில் அமைச்சர் சண்முகம் காணொளி வாயிலாக இந்த கருத்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூர் போலீஸ் துறையில் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் உணவங்காடி, போக்குவரத்து நிலையங்கள் ஆகிய இடங்களில் இன்னும் கூடுதலான காவல்துறை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 999 எனும் அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்பவருக்கு காணொளி வாயிலாக உதவி செய்யும் புதிய நடைமுறை வருகின்ற 2023-ம் ஆண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்

Related posts