சிங்கப்பூரில் ஒரு குற்றத்தை கண்டறித்த பாதுகாவலர் ஒருவர், அதன் மூலம் ஆதாயம் பார்க்க ஆசைப்பட்டு இப்போது தண்டனைக்கு தயாராகி வருகிறார்.
சிங்கப்பூர் West Coast Crescent-ல் உள்ள Seahill குடியிருப்பில் மூத்த பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் கணேசன் குணசேகரன். வயது 33.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி இரவு 11 மணியளவில், அதே குடியிருப்பில் வசிக்கும் ஜப்பானிய பெண் ஒருவரும், வெளியிலிருந்து வந்த அப்பெண்ணின் ஆண் நண்பரும் அந்த குடியிருப்பின் 24வது மாடியில் இருந்த கழிவறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் இருவரும் ஆசிரியர்கள். அந்த பெண் அதே குடியிருப்பில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில், கழிவறையில் இருவரும் ஒன்றாக இருந்த பிறகு, அவர்கள் வெளியே வந்ததை பார்த்த கணேசன், அந்த நபரை மிரட்டியிருக்கிறார்.
இருவரும் கழிவறையில் உடலுறவில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்போவதாக அந்த நபரை மிரட்ட, அந்த ஜப்பானிய இளைஞரும் பயந்து போக, இறுதியில் 10,000 டாலர் பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன் என்று கணேசன் கூறியிருக்கிறார்.
ஆனால், ஒருக்கட்டத்தில் கணேசனின் டார்ச்சர் அதிகமாக அந்த ஜப்பானிய இளைஞர் தாமாகவே போலீசிடம் புகார் அளித்துவிட்டார். மெட்ரோபோலிஸ் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் கணேசன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மிரட்டி பணம் பறித்த தன் மீதான குற்றச்சாட்டை கணேசன் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 21) கணேசனுக்கு 27 மாதம் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன.