சிங்கப்பூருக்கு “ஹெல்த் சர்வ்” சமீபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்றால், எப்போது வேண்டுமானாலும் அந்த தொழிலாளர்கள் 3129 5000 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் இந்த தொலைபேசி எண்ணிற்கு இலவசமாக பேசலாம்.
இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளது. “இந்த சவாலான காலகட்டத்தில் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை எப்படி செய்யலாம் என்பதற்கான சில எளிய குறிப்புகள் bit.ly/HSTipsTamil என்று முகநூல் பக்கத்தில் தமிழிலும் மேலும் bit.ly/HSTipsBengali என்ற முகநூல் பக்கத்தில் பெங்காலியிலும் அறிந்துகொள்ளலாம்.
இந்த பெருந்தொற்று காலம் என்பது சிங்கப்பூரில் வாழும் பிறரை காட்டிலும் விடுதிகளில் சிறிய இடங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தோலிலாளர்களுக்கு ஒரு நரக வேதனையாகவே உள்ளது. சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் அடைந்து கிடக்கின்றனர் வெளிநாட்டு தொழிலாளர்கள். இந்நிலையில் இந்த வாரம் முதல் விடுதிகளில் உள்ள தொழிலாளர்கள் வெளியில் சென்றுவர முயற்சிகள் மனிதவள அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் இதுபோன்ற புதிய ஹெல்ப்லைன் சேவைகளையும் அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. வெளிநாட்டு ஊழியர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி அவர்களை தொடர்புகொண்டு பேசலாம். உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை தொழிலாளர்கள் இந்த எண்களின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.