TamilSaaga

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – 23 வீரர்களுடன் களமிறங்கும் சிங்கப்பூர்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடந்த போட்டிகளை போல இல்லாமல் ஒரு மிக பெரிய தொற்று காலத்தில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளை சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க பாதுகாப்பாகவும், அதே சமயம் மிகுந்த ஆர்வத்துடனும் டோக்கியோவுக்கு வந்தவண்ணம் உள்ளார்.

இந்த முறை நடைபெறவிருக்கும் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்பது சற்று வருத்தமளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்களின் சுகாதார நிலை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா ஜூலை 23 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 16 நாட்கள் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து 12 வெவ்வேறு போட்டிகளில் 23 போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு சிங்கப்பூர், ஒலிம்பிக்கில் அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்றது 2012ம் ஆண்டு ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் 9 போட்டிகளில் சிங்கப்பூர் பங்கேற்றது.

1956 ஆம் ஆண்டில் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டிகளில் 51 விளையாட்டு வீரர்களுடன் சிங்கப்பூர் சார்பில் பங்கேற்றாது நினைவுகூரத்தக்கது.

Related posts