கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான போக்குவரத்து ஆனது பெருமளவு சரிவினை சந்தித்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் விமானத்துறையானது படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொரோனா தொற்றுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டியது. சுற்றுலா துறையும் ஓரளவு வளர்ச்சி கண்டதால் சுற்றுலா துறையை நம்பி இருக்கும் பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான போக்குவரத்தும் சுற்றுலா துறையும் ஊன்றுகோலாக இருந்தன.
வளைகுடா நாடுகளும் விமான போக்குவரத்து காரணமாக பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் கண்டன .இந்நிலையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் பார்க்கும் பொழுது விமான போக்குவரத்து ஆனது நோய் தொற்றுக்கு முந்தைய காலத்தை காட்டிலும் வளர்ச்சி அடையும் என கணித்துள்ளனர் .விமான சேவையின் தேவையானது அதிகரித்துள்ளதால் விமான நிறுவனங்கள் அதிகளவு லாபம் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறை ஆனது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதற்கு முந்தைய காலங்களில் ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் ஓரளவிற்கு லாபத்தை அடைந்தன. இந்நிலையில் வரும் ஆண்டில் விமான போக்குவரத்து முழுமையான வளர்ச்சி கண்டு சாதனை புரியுமென பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.