TamilSaaga

சிங்கப்பூரில் 2 புதிய நோய் குழுமம் : டோ பயோ & புங்கோல் பேருந்து பரிமாற்றங்கள் – 35 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 26) நிலவரப்படி உள்நாட்டில் பரவும் பெருந்தொற்று 112 வழக்குகளையும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய நான்கு வழக்குகளையும் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியது. தற்போது சிங்கப்பூரில் பதிவினை மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 66,928 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் மூன்று புதிய கிளஸ்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே சமயம் மேலும் மூன்று கிளஸ்ட்டர்கள், தொற்றுகள் மேலும் பதிவாகாத நிலையில் மூடப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தற்போது 68 கிளஸ்ட்டர்கள் நடப்பில் உள்ளன என்றும். மூன்று முதல் 1,155 தொற்றுகள் வரை அந்த கிளஸ்ட்டர்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புங்கோல் பேருந்து இன்டெர்சேன்ஜ் மற்றும் டோ பயோ பஸ் இன்டர்சேஞ்சில் பணிபுரியும் தனிநபர்களிடையே இரண்டு தனித்தனி பணியிட கிளஸ்டர்களை குறித்து விசாரிப்பதாக MOH தற்போது தெரிவித்துள்ளது. மொத்தம் 11 வழக்குகள் தற்போது புங்கோல் பஸ் இன்டர்சேஞ்சுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் இன்டர்சேஞ்சில் பணிபுரியும் 10 ஊழியர்கள் மற்றும் ஒரு ஊழியரின் வீட்டு தொடர்பு ஆகியவை அடங்கும்.

25 வழக்குகள் தற்போது Toa Payoh Bus Interchange உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று பரவல் அனைத்தும் அந்த இண்டர்சேஞ்சில் பணிபுரியும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு பரிமாற்றங்களின் உள்ள அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 சோதனை மேற்கொள்ளப்படும் என்றும். வழக்குகளின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தலில் வைக்கப்படும் என்றும் MOH கூறியது.

Related posts