சிங்கப்பூரில் பெடோக் பகுதியில் கூடைப்பந்து கட்டமைப்பு ஒன்று சரிந்து விழுந்து இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெடோக் பகுதியில் நேற்று (ஜூலை 26) திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவு 8.45 மணியளவில் பெடோக் பகுதியில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்ததாகவும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றபோது பிளாக் 18 பெடோக் தெற்கு சாலை அருகே விழுந்து கிடந்த கூடைப்பந்து கட்டமைப்பிற்கு அடுத்தபடியாக காயமடைந்த இளைஞர் ஒருவரை கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த 17 வயது இளைஞன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும், அதன் பின்னர் காயங்களால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞன் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
குடிமை பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞனுக்கு முதலுதவி அளித்து அந்த பிறகு மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பலரின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் அந்த இளைஞன் மரணித்துள்ளார்.