TamilSaaga

“சிங்கப்பூரின் மனிதவள அமைச்சராக எனது 100 நாள் பயணம்” : முகநூலில் பகிர்ந்துகொண்ட டான் சி லெங்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சராக பதிவியேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில் தனது இந்த 100 நாள் பயணத்தை குறித்து தனது முக்கால்நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சி லெங். அவர் வெளியிட்ட அந்த பதிவில் “ஒரு மனிதன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும்போதும், கடுமையான பணிகளை செய்யும்போதும் “என் நேரம் பறந்து செல்கின்றது” என்று கூறுவது வழக்கம். இந்நிலையில் நான் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று என்னால் நம்ப முடியவில்லை”.

“கடந்து வந்த இந்த 100 நாட்களை திரும்பிப் பார்த்தால், அது ஒரு பரபரப்பான, ஆனால் அர்த்தமுள்ள 100-நாட்களாக இருக்கின்றது”. “நான் எனது இந்த பயணத்தில் ‘பணியிட நியாயத்தின்’ மீது ஒரு முத்தரப்பு குழுவை அமைத்தேன். நிறுவனங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பயணங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகங்களுடன் இணைந்து பல உரையாடல்களைப் நடத்தினேன். இன்னும் என் பணியின் பட்டியல் நீளுகிறது”.

“மனிதவள அமைச்சராக எனது முன்னுரிமைகள் பற்றி பகிர்ந்து கொள்ள நான் சமீபத்தில் உள்ளூர் ஊடக குழுவுடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டேன்”. “முக்கியத் துறைகளுக்கான எங்கள் உள்ளூர் திறமைகளை வளர்த்து, வலுவான சிங்கப்பூர் மையத்தை உறுதி செய்வதற்காக முத்தரப்பு பங்காளிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் நான் மிகுந்த கவனம் செலுத்துவேன்”.

“குறிப்பாக, நாங்கள் 3 முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவோம் – உள்ளூர்வாசிகளுக்கு புதிய தொழிலை மாற்றுவதற்கு உதவுதல், இருக்கும் தொழிலாளர்களை புதிய அல்லது விரிவாக்க வேலை வாய்ப்புகளுக்கு மீண்டும் கொடுப்பது மற்றும் முன்னேறும் மனித மூலதன நடைமுறைகளை ஊக்குவித்தல்”. என்னுடைய பணி சிறக்க எனக்கு உதவும் அனைத்து நல்லவுள்ளகளுக்கும் நன்றி என்று தெரிவித்தவர் அமைச்சர் டான் சி லெங்.

Related posts