ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிக்கையானது பணக்கார விளையாட்டு வீரர்களுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த பத்திரைக்கை அமெரிக்காவை சார்ந்தது இதில் பெயர் இடம்பெற்றாலே அவ்வளவு பெருமை என்ற அளவில் மிகப்பெரும் பத்திரிக்கையில் இந்த டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
நம்பர் 1 யார்?
விளையாட்டில் வரும் சம்பளம், விளம்பரத்தில் வரும் சம்பளம் மற்றும் மார்கெட் நிலவரம் ஆகியவற்றை உள்ளடக்கி நடத்திய ஆய்வில் தற்காப்பு கலை வீரர் Conor McGregor முதலிடத்தை பிடித்துள்ளார். சுமார் 180 மில்லியன் டாலர் வருமானம் பெற்று இந்த டாப் 10ல் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் விளையாட்டு வீரராக அவர் உள்ளார்.
கடந்த ஆண்டு பட்டியலில் டாப்பில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் ரோஜர் பெடரர் ஆகிய வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் நம்பர் 1 யார்?
விளையாட்டு என்றாலே நம் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கிரிக்கெட் தான். சரி கிரிக்கெட் விளையாட்டில் பணக்கார வீரராக முதலிடத்தை பிடிப்பவர் யார் என்று தெரியுமா? sportingfree.com தகவலின் படி பணக்கார கிரிக்கெட் வீரர் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1090 கோடியாக உள்ளது.
ஓய்வுக்கு பிறகும் பிராண்ட் அம்பாசிடர், விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் போன்றவற்றின் மூலம் சச்சினுக்கு வருமானம் வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.