பொண்ணு பொறந்தா அதிர்ஷம்-னு சொல்லுவாங்க! நம்ம ஊருல ஆதி காலத்துல பொண்ணுங்க வேணாம்னு பலர் யோசிச்சாலும் போகப் போகப் பெண்பிள்ளைகள் தான் வேணும்னு கேக்குற தம்பதியினர் பெருகித்தான் போய்ட்டாங்க!
சிலர் சுருக்கமா ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தைனு குடும்பத்தை முடிச்சுக்குவாங்க! ஏன்னா நாம் இருவர் நமக்கிருவர் பாலிசி தான நம்ம நாட்டின் ஸ்லோகம்! எட்டு பத்து-னு இடுப்புவலி அனுபவிச்ச பாட்டியெல்லாம் இப்ப இல்லாமலே போய்ட்டாங்க! ஒரு குழந்தைக்கே இங்க இருப்பு கொள்ளல! கட்டாயமா ஒன்னு ஆசைக்கு இன்னொன்னு அவ்வளவு தான் நம்ம ஊரு! அதுல பெண்ணோ ஆணோ இருக்கறது போதும் எதுக்கு இன்னொன்னு- னு யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டாங்க! மூனாவதா ஒரு குழந்தைனாலே மூக்கு மேல விரல் வைக்கறாங்க நம்ம மக்கள்!
இப்படி நம்ம ஊருல வித்தியாசமா பாக்குற பல விஷயங்களை அசால்ட்டா செஞ்சு இருக்காங்க அமெரிக்காவைச் சார்ந்த யலன்சிடா! பெண் குழந்தை வேணும்னு ஆசை வந்ததெல்லாம் சரி! என்ன செய்ய ஆண்டவன் குடுத்த பாக்கியம் அடுத்தடுத்து அத்தனையும் ஆண் குழந்தையா போச்சு! ஏதோ ரெண்டு மூணு-னு நினைக்காதீங்க மொத்தம் 9 ஆண் குழந்தைகள்!
யப்பா-னு யோசிக்கறதுக்குள்ளயே அடுத்த கர்பம்! ஏதோ கடவுள் நல்ல Mind-ல இருந்திருக்காரு போல! பத்தாவதா இரட்டைக் குழந்தைகளைக் கொடுத்திருக்காரு! அதுலயும் ஒரு Twist-ஆ Twins….ஒன்னு ஆண் குழந்தை….இன்னொன்னு பெண் குழந்தை! அடம் புடிச்சு சாதிச்சுட்டியேம்மா! இதுல குட்டி பாப்பாக்கு தம்பி வேணுமேனு அடுத்த கர்பகாலமும் ஆரம்பமாகி இருக்கு..
கேக்கும் போதே நமக்கு தலை சுத்துதே!
குழந்தைகளை விரும்பாதவங்க யாரும் இல்ல! இருந்தாலும் நம்ம வாழ்க்கையின் பல சூழ்நிலைகள் அதிகமான பொறுப்புகளை எடுத்துக்க அனுமதிக்கிறது இல்ல. ஆனால் யலன்சிடா அது அனைத்தையும் கடந்து தனக்கு பெண் குழந்தை வேணும்னு உறுதியா இருந்திருக்காங்க! 11 குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. பொருளாதாரம், குடும்பம், சூழ்நிலைகள் என அனைத்தும் சாதகமா இருக்கனும். அப்பொழுது தான் குழந்தைகளை சரியா வளர்க்க முடியும். யலன்சிடா-வின் கணவரும் அவருக்கு உதவியாக இருப்பதால் தான் இதனை குழந்தைகளையும் பெற்று வளர்க்க முடிகிறது.
யலன்சிடா-வின் இந்த பிடிவாதத்தைக் குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க? ஆசைப்பட்டதை அடைய பிடிவாதமா இருந்து தான ஆகணும்!