நீங்கள் ஏற்கனவே EZ-Link கார்டை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இப்பொழுது EZ-Link ஆப்பை பயன்படுத்த வேண்டிய நேரம். சிங்கப்பூரில் EZ-Link நிறுவனம் பிரபலமான பண பரிவர்த்தனை சேவைகளை செய்யும் ஒரு சிறந்த நிறுவனம். ஏற்கனவே இந்த நிறுவனம் EZ-Link கார்டை அறிமுகப்படுத்தி அது பயன்பாட்டில் இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் Ez-Link கார்டை அறிமுகப்படுத்தியது தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான கார்டுகள் சிங்கப்பூரில் புழக்கத்தில் உள்ளது. இப்பொழுது அந்த நிறுவனம் EZ-Link ஆப்பை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை அளிக்கிறது. இந்த ஆப்பை பற்றி இந்த பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் பார்க்கலாம். தற்போது அந்த நிறுவனம் scam-கள் நடப்பதாக அறிந்து எச்சரிக்கை செய்கிறது. எனவே இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்வதற்கு முன் இந்த பதிவு உங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் இந்த EZ-Link App எதற்கு பயன்படுகிறது என்பதை பார்க்கலாம், ஒவ்வொரு நாளும் பொது போக்குவரத்தை நம்பி பலர் தங்களுடைய பயணங்களை தொடர்கின்றனர். அப்படி நம்முடைய போக்குவரத்து செலவுகளை கேஷ் லெஸ் பேமென்ட் ஆக செய்ய இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் சிங்கப்பூரில் MRT அல்லது பஸ் சேவைகளை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதுவும் EZ-Link App வாலட்டில் நீங்கள் தொகையை பதிவேற்றி அதன் மூலம் நீங்கள் பயணிக்கலாம்.
இந்த ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பல்வேறு நன்மைகளை பெறலாம். அது என்ன என்ன என்பதை பார்க்கலாம். ஆப்பின் வழியாக நீங்கள் உங்கள் பயணங்களுக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்? எப்பொழுது எங்கே என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம். உங்களுடைய டிரான்ஸ்லேஷன் ஹிஸ்டரி பார்ப்பதன் மூலம் ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை உடனடியாக கண்டறியலாம். உங்களுடைய வாலட்டு குறைவான தொகை இருந்தால், ஆட்டோமேட்டிக்காக பணம் டாப்-அப் செய்யப்படும். நீங்கள் இதை கவனித்து ஒவ்வொரு முறையும் பணத்தை டாப்-அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய காட் திருடு போய்விட்டது அல்லது தொலைந்து விட்டது என்பது போன்ற சமயங்களில் இந்த ஆப்பின் மூலமாக நீங்கள் முடக்கலாம். இந்த ஆப் மூலம் concession card -ம் டாப்-அப் செய்ய முடியும் உங்களுடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்காகவும் பல பெரியவர்களுக்காகவும் இதை சில நிமிடங்களிலேயே செய்ய முடியும்.
நீங்கள் உங்களுடைய சொந்த வாகனத்தை எடுத்து செல்லும்போது பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த சமயங்களில் இந்த ஆப்பின் மூலம் பணம் இல்லா பரிவர்த்தனையை செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் நீண்ட வரிசையை தவிர்க்கலாம்.
இந்த ஆப்பின் மூலம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு ட்ரான்ஷாக்ஷனுக்கும் ரிவார்டுகள் அறிவித்திருக்கிறது. ஆம், நீங்கள் செய்யும் 0.10 SGD ட்ரான்ஷாக்ஷனுக்கு 1 ரிவார்டு பாயிண்டு கிடைக்கும். நீங்கள் 750 ரிவார்ட பாய்ண்டுகள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை உபயோகித்து gong cha -லிருந்து $1.50 மதிப்புள்ள earl grey milk tea இலவசமாக வாங்கலாம். ஒருவேளை நீங்கள் 800 ரிவார்டு பாய்ண்டுகள் வைத்திருக்கிறீர்கள் Old Chang Kee-லிருந்து இலவசமாக curry puff வாங்கலாம். அது மட்டும் இல்லாமல் 15000 ரிவார்டு பாய்ண்டுகள் வைத்து யுனிவர்சல் ஸ்டுடியோவுக்கான ஐந்து டாலர் வவுச்சர் பெறலாம். Ez- link வாலெட் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சில்லறை விற்பனை விற்பனை நிலையங்களில் பணம் செலுத்த முடியும். உங்களுடைய தனிப்பட்ட அக்கவுண்ட் மட்டுமல்லாமல் உங்களுடைய குடும்பத்தினர் உடைய ஆப் அக்கவுண்ட் நீங்களே ட்ராக் செய்யலாம். மேலும் அதில் பணம் அனுப்பவும் சுலபமாக இருக்கும். இது மட்டும் அல்லாமல், Ez-Link கார்டு அல்லது Ez-Link ஆப்பை பயன்படுத்துவதால் இன்னும் என்னென்ன ரிவார்டுகள் பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் Ez-Link மூலமாக ERP அல்லது கார் பார்க்கிங் பேமெண்ட் செய்ய உங்கள் வேளட்டில் பணம் இல்லை எனில் கவலைப்பட தேவையில்லை. போஸ்ட் பெய்டாக கூட பணம் செலுத்த முடியும். பின்னர் நீங்கள் திரும்ப செலுத்தும் தொகைக்கு எந்தவிதமான சர்வீஸ் சார்ஜும் இல்லை. நீங்கள் உங்களுடைய Ez-Link அக்கவுண்ட்டை பிளஸ் அக்கவுண்ட் உடன் இணைப்பதால் நிறைய சலுகைகளை பெறலாம். அக்கவுண்ட் இணைத்த பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு 2 $ -க்கும் 1 லிங்க் பாயிண்ட் கிடைக்கும். அந்த லிங்க் பாயிண்ட்டை நீங்கள் Fairprice , Poh Heng, என இன்னும் பல இடங்களில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அக்கவுண்ட்டை சைன் அப் செய்ய 10 டாலர்கள் செலுத்த வேண்டும்.
Ez-Link அக்கவுண்ட் மூலம் ஒவ்வொரு பத்து முறை பொது போக்குவரத்து பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு 50mb என்ற அடிப்படையில் மூன்று வாரங்கள் இலவச டேட்டாக்கள் பெறலாம். நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு கார் புக் செய்ய வேண்டுமெனில் அதுவும் இந்த Ez-Link ஆப் மூலமாக செய்யலாம். இந்த ஆப் உங்களை Ryde app -க்கு வழி வகுத்து விடும் ஆனால் நீங்கள் அதற்கு உங்களுடைய சோர்ஸ் மட்டும் டெஸ்டினேஷன் இடங்களை குறிப்பிட வேண்டும்.
இப்படி பல்வேறு சலுகைகள், ரிவார்டுகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என Ez-Link ஆப்பை உடனே டவுன்லோட் செய்யுங்கள். ஆஃபருக்காக மட்டுமல்லாமல் இந்த ஆப் உங்களுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் Ez-Link ஆப்பை பயன்படுத்த முடியும். இதுவரை நீங்கள் Ez-Link கார்டை பயன்படுத்தி இருப்பீர்கள், இனி Ez-Link ஆப்பை பயன்படுத்தி உங்களுடைய வேலைகளை மிகவும் சுலபமாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த ஆப்பை எப்படி டவுன்லோட் செய்வது? உங்களுடைய மொபைல் ஃபோனில் இருந்து கூகுள் பிளே ஸ்டோர், Huawei ஆப் கேலரி அல்லது ஐபோன் ஆக இருந்தால் ஐ ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்து உங்களுடைய அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்ய வேண்டும், அவ்வளவுதான் மிக சுலபமாக வேலை முடிந்தது இனி நீங்கள் Ez-Link ஆப்பை பயன்படுத்தலாம்.