Thaipusam in Singapore: நமது சிங்கப்பூரில் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா… வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு தை மாதத்தில் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக உலகெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நமது சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூசம் (Thaipusam) கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நேற்று இரவு தொடங்கிய தைப்பூச விழாவில், பக்தர்கள் தற்போது காவடி எடுத்து வருகின்றனர். அதேபோல், பெண்கள் பால்குடம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்துச் செல்லும் பிரத்யேக வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே..