சிங்கப்பூரின் யூ டியூப் பிரபலம் கிறிசன் லீ, தான் விரும்பும் எதையும் கருத்துத் தெரிவிக்கலாம் மற்றும் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கும் ஆன்லைன் பயனர்கள் குறித்து மிக கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
Wah!Banana என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் 26 வயதான கிறிசன் லீ. அவருடைய டிக்டாக அக்கவுண்டிற்கு சில விரும்பத்தகாத மெசேஜ்களை சமீபத்தில் பதிவிட்டிருந்தனர்.
அதாவது, சுமார் 800க்கும் மேற்பட்டோர் கிறிசன் சிறிய மார்பு குறித்து கிண்டல் செய்து பதிவிட்டிருந்தனர்.
அந்த கருத்துக்கள் அனைத்தையும் Screenshot எடுத்த லீ, தனது Instagram-ல் அதை தொகுத்து பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், “அவமானம். அவர்களின் ஆளுமை எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?
நான் என் சிறிய மார்பகங்களையும் என் உடலையும் விரும்புகிறேன், நான் பிறந்த விதத்தைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “மற்றவர்களைத் தாழ்த்துவதற்காகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மனிதர்கள் இவர்கள். முடிந்தால், உங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி, இதே கருத்துக்களை பதிவிடுங்கள் பார்ப்போம்” என்று அவர்களுக்கு லீ சவால் விடுத்தார். அப்படி வெளியிட்டால், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் அந்த திருமுகத்தை பார்க்க முடியும். இதுபோன்ற கருத்துக்களை ஊக்குவிப்பவர்கள் கூட துன்புறுத்தலுக்கு உடந்தையாக உள்ளனர்” என்று லீ மேலும் கூறினார்.