வெளிநாட்டில் வேலைக்காக கிளம்ப இருக்கும் ஊழியர்கள் பல வழிகளை யோசித்து வைத்திருப்பார்கள். அதில் ஒன்று தான் TEP பாஸ். சில மாதங்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் இந்த பாஸை ஏன் தேர்வு செய்யலாம். இதை மிஸ் செய்யும் போது மீதமிருக்கும் முக்கிய வழிகள் குறித்து தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.
வெளிநாட்டில் படித்த மாணவர்களும், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சிக்காக தான் இந்த பாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் மாணவராக இருக்கும் போது, இந்த பயிற்சி உங்களது படிப்பின் அங்கமாக இருக்க வேண்டும். மேலும் நீங்க சிங்கப்பூர் MOM அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். 3000 சிங்கப்பூர் டாலர் நிரந்தர சம்பளமாக வாங்க வேண்டும். பிரபல சிங்கப்பூர் நிறுவனம் உங்களை ஸ்பான்ஷரில் அழைத்து வந்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்காக ப்ளைட் ஏறும்போதே இருக்கும் ஆசை.. இங்கை செட்டில் ஆகணும் என்பதே… அந்த ஆசை இருந்தால் PR தான்.. எப்படி அப்ளே செய்யலாம்?
பயிற்சிக்கு வந்திருக்கும் ஊழியராக இருந்தால் 3000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக வாங்க வேண்டும். உங்களுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ஸ்பான்ஷர் செய்திருக்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்ட துறையில் TEP பாஸ் அப்ளே செய்திருந்தால் மீண்டும் அப்ளே செய்ய முடியாது.
TEP பாஸ் அப்ளிகேஷனை சப்மிட் செய்யும் போது,
*பாஸ்போர்ட் விவரங்கள்
*பாஸ்போர்ட்டில் உள்ள நபரின் பெயர் அவர்களின் மற்ற ஆவணங்களில் இருந்து வேறுபட்டால், தயவுசெய்து விளக்கக் கடிதம் மற்றும் ஆவணங்களையும் பதிவேற்றவும்.
*பயிற்சி குறித்த மொத்த விவரங்கள்
*பயிற்சிக்கு அப்ளே செய்பவரின் கல்வி தகுதி சான்றிதழ்கள்
இந்த பாஸ் அப்ளே செய்ய MOM தரப்பில் முதலில் $105 சிங்கப்பூர் டாலரும், அப்ரூவ் ஆன பிறகு $225 சிங்கப்பூர் டாலருமே கேட்கப்படும். அப்ளே செய்த 3 வாரத்தில் அப்ரூவ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. 3 மாதம் மட்டுமே இந்த பாஸ் செல்லும்படியாகும் அதன் பின்னர் புதுப்பிக்க முடியாது. உங்கள் கம்பெனி ஒப்புக்கொண்டால் வேறு பாஸ் அப்ளே செய்து இன்னொரு கம்பெனிக்கு வேண்டும் என்றால் வேலைக்கு செல்ல முடியும்.
சரி தற்போது உங்களது TEP பாஸ் அப்ளே செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டால் என்ன செய்யலாம் என்ற சந்தேகம் இருந்தால் அதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது.
உங்களது பாஸ் நிராகரிக்கப்படும் பட்சத்தில், நீங்கள் மாணவராக இருந்தால் work holiday programme மூலம் உங்களால் சிங்கப்பூர் வர முடியும். பயிற்சிக்கு வரும் ஊழியராக இருந்தால் TWP பாஸ் அப்ளே செய்து சிங்கப்பூரில் பயிற்சி செய்யலாம். இந்த பாஸில் சிங்கப்பூரில் 6 மாதங்கள் வரை இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.