சமீப காலங்களில் சிங்கப்பூரில் இருக்கும் தொழிலாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு அதாவது கோவிட்-19 தொற்று காலங்களுக்கு முன்பாக 87 சதவீதமாக இருந்த இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது 60% மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வேலை செய்கின்றனர். சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் மற்றும் சிங்கப்பூருக்கு வேலைக்காக குடிப்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல தயாராக இருக்கின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல தயாராக இருப்பவர்களில் எழுவது சதவீதம் பேர் 30 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் ஆவர்.
இந்த பதிவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிங்கப்பூரிலிருந்து எந்தெந்த நாட்டிற்கு புலம்பெயர்கிரார்கள்? எவ்வாறு புலம்பெயர்கள் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். புலம்பெயர் தொழிலாளர்களை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து 60 லிருந்து 70 சதவீதம் தொழிலாளர்கள் புலம்பெயர தயாராக இருக்கின்றனர். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலக சந்தையில் இருக்கும் அனைத்து விதமான தொழிலாளர்களும் தங்களுடைய தனிமனித மற்றும் குடும்ப மேன்மைக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். Mr David Blasco , Randstad Singapore -ன் நிறுவனத்தின் பொது மேலாளர் இது பற்றி கூறுகையில், சிறந்த ஊதியம், திருப்தியான வேலை, மற்றும் வொர்க் லைஃப் பேலன்ஸ் இவற்றிற்காக பாரம்பரியமாக சிங்கப்பூரில் இருந்தவர்கள் கூட வெளிநாடுகளில் வேலை தேடினர்.
ஆனால் கோவிட்-19 தொற்று, இந்தப் புலம் பெயர்வை கணிசமாக குறைத்து இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் பல நிறுவனங்கள் பல விதமான சலுகைகளையும், பாதுகாப்பான பணி சூழலையும் அமைத்துக் கொடுப்பதால் இந்த புலம்பெயர்வு கணிசமாக குறைந்திருக்கிறது. நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை மாற்றி அமைப்பதால், புதுவிதமான கொள்கைகளை கொண்டு வந்ததால் இது சாத்தியமாகி இருக்கிறது. இதுவே வெளிநாட்டு வேலைகளுக்கான மோகத்தை குறைத்து இருக்கிறது.
அதேபோல் மனித வள வல்லுனர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர் Ms Alyce Cheong கூறுகையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் தலைமை இடமாகக் கொண்ட சிங்கப்பூர் அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கு, தொழிலில் முன்னேறுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கிறது. தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் பலவிதமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இதன் காரணங்களால் 30 லிருந்து 40 வயது உட்பட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்கள் நாட்டிலேயே தங்களுடைய குடும்பத்தாருடன் வசிப்பதற்கு விருப்பப்படுகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இது குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 188 நாடுகளில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மிக குறை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 3000 பேர் கலந்து கொண்டனர். 3000 பேரில் 80 சதவீதம் மக்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வெளிநாட்டினவர். இந்த கணக்கெடுப்பில் பதில் அளித்தவர்களில், மார்க்கெட்டிங் மற்றும் ஊடகத்துறையில் வேலை செய்பவர்கள் இடமாற்றம் செய்ய தயாராக இருக்கின்றனர். இது மட்டும் இன்றி டிஜிட்டல், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் துறைகளில் இருப்பவர்களும் வெளிநாட்டிற்கு இடம் பெயர் தயாராக இருக்கின்றனர்.
இன்னொரு புறத்தில், இந்த கணக்கெடுப்பில் பதில் அளித்தவர்களில் சமூக பாதுகாப்பு, நிர்வாகத் துறை, சமூக சேவை துறை, மற்றும் செயலக தொழில்துறையை சார்ந்தவர்கள் இடம்பெயர்வுக்கு பெரிதும் ஈடுபாடு காட்டவில்லை. அடுத்தது எந்தெந்த நாடுகளுக்கு அதிகபட்சமாக இடம் பெயர் பெயர்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். பொதுவாக சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் வேலை காரணத்திற்காக ஆஸ்திரேலியாவுக்கு 33 சதவீதம் செல்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக இருக்கும் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இருக்கின்றது. மேலும், சிங்கப்பூருக்கு அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகள் சிங்கப்பூர் தொழிலாளர்களுக்கான பயண இடங்களாக இருக்கின்றது. இந்த கணக்கெடுப்பில், சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் குறுகிய கால வேலைகளை விரும்புகின்றனர். அதாவது ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புகின்றனர். அதுவே தென்கிழக்கு ஆசிய பகுதியை சேர்ந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கி வேலை செய்ய விரும்புகின்றனர். பொதுவாக கூறுகையில், பலர் நீண்ட கால காலவரையின்றி தங்குவதற்கு விருப்பம் காட்டுகின்றனர்.
Ms Cheong கூறுகையில், குறுகிய காலத்திற்கான வெளிநாட்டு பயணங்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணம்? தங்களுடைய குடும்ப முன்னேற்றம் அடுத்த தலைமுறைக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரை சேர்ந்தவர்களும் வெளிநாட்டு வேலைக்கு முக்கிய காரணமாக தெரிவிப்பது நிதி மற்றும் பொருளாதார சூழலே ஆகும். குறிப்பாக முக்கிய மூன்று காரணங்களாக கருதப்படுவது, குடும்ப நிதி மற்றும் பொருளாதாரம், தொழில் முன்னேற்றம் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை பெறுவதற்கு.
இப்பொழுது வேலைக்காக வெளியூருக்கு செல்ல தயங்குபவர்களின் காரணங்களை தெரிந்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர இயலாமை, இடமாற்றத்திற்கான செலவுகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை குறித்து எழும் கவலைகள். இவையே வெளிநாட்டுக்கு புலம்பெயர்வதை விரும்பாதவர்களின் காரணங்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கணக்கெடுப்பு, புலம்பெயர்வதற்கு பிரபலமான பணியிடங்களை வரிசைப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் புலம்பெயர்வதற்கு விரும்பத்தக்க இடமாக முதல் இடத்தில் இருக்கிறது. உலகளாவிய கணக்கிடுகையில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் சிறந்த தரமான வேலை வாய்ப்புகள் இருப்பதால் இதுவே முக்கிய காரணமாக புலம்பெயர்வுக்கு கூறப்படுகிறது.