TamilSaaga

சிங்கப்பூர் பறக்க ரெடியாக காத்திருந்த பயணிகள்.. “அந்த” ஒரு நிமிடம் அதிர்ந்த விமானி – பதறிய உறவினர்கள்!

நேற்று (நவ.15), சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் புறப்படுவதற்கு முன் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. விமான ஓட்டியின் விழிப்புணர்வால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

  • விமான எண்: AI 688
  • நேரம்: அதிகாலை 2.50 மணி
  • பயணிகள் எண்ணிக்கை: 240

மொத்தமாக பணிப்பெண்கள் உட்பட விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை – 250.

நடந்தது என்ன?

சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமான ஓட்டி கண்டறிந்தார். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தை நிறுத்தி, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

இதுகுறித்த்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “விமான ஓட்டியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோள்” என்றனர்.

இதையும் படிக்க : வேலைவாய்ப்புக்கு வெயிட்டிங்கா? பிரபல MNC கம்பெனியின் அப்டேட்! மிஸ் பண்ணிடாதீங்க!!

தொழில்நுட்ப குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் விமானி அந்த குறைபாட்டை கண்டறிந்திருக்காவிட்டால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதே நிதர்சனம்!

விமானிக்கு ஒரு ராயல் சல்யூட்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts