TamilSaaga

ஒலிம்பிக் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ சில தகவல்கள்!

நான்கு வருடத்திற்கு ஒருமுறை உலகமே சேர்ந்து கொண்டாடும் ஒரு விளையாட்டுத் திருவிழா. கால்பந்து போலவே இதுவும் நான்கு வருடத்திற்கு ஒருமுறை தான் நடக்கும். இதுல இரண்டு பிரிவுகள் இருக்கு கோடைகால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால ஒலிம்பிக். கோடைகால ஒலிம்பிக் நடந்த அடுத்த இரண்டு வருடத்தில், குளிர்கால ஒலிம்பிக் நடக்கும். குளிர்கால ஒலிம்பிக் என்பது மலை மற்றும் குளிர்ப்ரதேசங்கள்ல நடக்கும்.

இந்த போட்டிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டுல நடக்கும். அத நடத்துற உரிமையை ஒவ்வொரு நாடுகளும் மிக பெருமை வாய்ந்ததா கருதினாங்க. பண்டையகால கிரேக்க கலாச்சாரத்துல ஒலிம்பிக் நடந்ததா சொல்லப்படுது. தற்பொழுது நடந்துவரும் போட்டிகள் 1896-ல இருந்து தான் தொடங்கப்பட்டுச்சு. அப்பொழுது குறைந்த அளவிலான நாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தான் பங்கேற்றாங்க. தற்பொழுது இருக்கும் முதல் மூன்று பதக்க முறை 1904 முதல் தான் அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. அப்பொழுது இருந்து ஒலிம்பிக்-ல் பதக்கம் என்றாலே மிக பெருமை வாய்ந்ததா விளங்கி வருது. நாட்டுக்காக பதக்கங்கள் வாங்குற விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் கொண்டாடுச்சு. அதுமட்டுமில்லாம அது அவங்க வாழ்க்கையின் மிக உயர்ந்த சாதனையா இருந்து வருது.

ஒலிம்பிக் போட்டிகளை அதிக முறை நடத்திய நாடாக அமெரிக்கா விளங்குது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் மொத்தம் 4 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று இருக்கு. அதற்க்கு அடுத்ததா ஐக்கிய ராஜ்யமான United Kingdom மொத்தம் மூன்று முறை ஒலிம்பிக்-கை நடத்தி மூன்றாவது நாடக விளங்குகிறது. இந்த ஒலிம்பிக் விளையாட்டின் சின்னம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 7 வண்ண வளையங்கள் ஆகும்.

இதுவரை அதிக பதக்கங்களைப் பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்தம் 2629 பதக்கங்களை அமெரிக்கா வென்றுள்ளது. ரஷ்யா 1624 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி 1386 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த போட்டியின் ஒரு மிக முக்கிய நிகழ்வு ஒலிம்பிக் ஜோதி ஏற்றுவது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே கிரேக்க நாட்டில் இந்த ஜோதி ஏற்றப்பட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படும். இந்த ஜோதி முதன் முதலில் சூரிய ஒளியின் உதவியோடு தான் ஏற்றப்படும். அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்த பின் இந்த ஜோதியானது இறுதியாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு எடுத்துவரப்படும். பிறகு அந்த நாட்டின் முக்கிய விளையாட்டு வீரர் இந்த ஜோதியை அதன் பீடத்தில் ஏற்றுவார்.

ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை இந்த ஜோதி அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். முடிந்த பின்னர் அணைக்கப்படும். இந்த ஜோதியை ஏற்றுவதும் ஏந்துவதும் மிக பெருமைக்குரிய காரியமாகக் கருதப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் வருகிற ஜூலை மாதம் துவங்கவுள்ளது. இப்பொழுது நடப்பது கோடைகால விளையாட்டு போட்டியாகும். இந்த வருடம் பிரான்ஸ்-ல் உள்ள பாரிஸ் நகரத்தில் நடைபெறவிருக்கும் இந்த போட்டிகள் ஜூலை மாதம் 26-ம் நாள் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ம் நாள் வரை நடைபெறவிருக்கிறது.

இதில் மொத்தம் 32 விளையாட்டுக்கள் 329 நிகழ்வுகள் நடைபெறும். மொத்தம் 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த விளையாட்டுகளில் மூன்று விதமான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

1. தங்கம்
2. வெள்ளி
3. வெண்கலம்

மேலும் பதக்கம் வழங்குவதில் முக்கிய நிகழ்வாக தங்கம் வென்ற நாட்டினுடைய தேசிய கீதம் இசைக்கப்படும். இது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக பார்க்கப்படுகிறது.

இந்த விளையாட்டுத் திருவிழாவின் துவக்க விழா மிகவும் விமரிசையாக நடத்தப்படும். அதில் அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் நாட்டினுடைய கொடி மற்றும் கலாச்சார உடையணிந்து அணிவகுத்து வருவர். இது மிக முக்கிய நிகழ்வாகும். இதன் பிறகு ஒவ்வொரு கட்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் முடிந்ததும் பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து போட்டிகளும் முடிந்த பின்னர் நிறைவு விழாவும் நடைபெறும்.

ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்கில் பங்கேற்று தனது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த பதக்கங்கள் அனைத்தையும் தனது நாட்டிற்கு எடுத்துச்செல்ல அவர்கள் கொடுக்கும் உழைப்பு சாதாரண காரியமல்ல.

இந்த வருடம் நடக்கவிருக்கும் போட்டிகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் வீரர்கள் விரைவிலேயே களமிறங்க காத்திருக்கிறார்கள். தங்கள் நாட்டிற்காக பதக்கம் வெல்ல முனைப்புடன் இருக்கிறார்கள். வருகிற ஜூலை மாதம் உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய விதத்தில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக காத்திருப்போம்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts