தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பரவியதாகக் கருதப்படும் “பீட்டா” வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், உணவு அங்காடிகள் போன்ற இடங்களுக்குச் செல்ல கட்டாயமாக “சுகாதார பாஸ்” வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடல்கடந்த பிரதேசமாக விளங்கும் Martinique தீவில் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்கிந்திய தீவு அதிகரித்திருப்பதை அடுத்து அங்கு மூன்று வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியினை Martiniqueவின் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது, ஏற்கனவே இந்த Martiniqueல் மாலை நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளும் அந்த தீவை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் அரசு வெளியிட்ட அரசாணையில் உணவகங்கள், திரையரங்குகள் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இடங்களில் மக்கள் செல்வதற்கு “சுகாதார பாஸ்” கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனால் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் அந்த இடங்களுக்கு செல்வதால் அங்கு உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்று பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தற்போது கூறியுள்ளார்.