சிங்கப்பூரில் இயங்கிவரும் மிகப்பெரிய கட்டிடமான இண்டர்நேஷனல் ப்ளாசா விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதன் 80 சதவீத பங்குதாரர்கள் விற்பதற்கு முன்வந்துள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் பகார் எனுமிடத்தில் அமைந்துள்ளது இந்த இண்டர்நேஷனல் ப்ளாசா. ஒட்டுமொத்த விற்பனை என்ற திட்டத்தின் கீழ் தற்போது இது விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்த திட்டத்தின் மூலம் விற்கப்பட்டும் மிகப்பெரிய அளவிலான கட்டிடம் இதுவாகும். இதில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 190க்கும் மேல் கடைகள் மற்றும் 550 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் அடங்கியுள்ளது. இது கடந்த 1970ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை தவிர இங்கு ஒரு வாகன பார்க்கிங் மற்றும் நீச்சல் குளமும் உள்ளது.
தற்போது இதன் குறைந்தபட்ச ஏலத்தொகையானது $2.7 பில்லியம் என நிர்ணயம் செய்யப்பட்டு வாங்க முன்வருபவர்கள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டே இதனை விற்பதற்காம முன்னெடுப்புகள் துவங்கப்பட்டன ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதன் விற்பனை தள்ளி வைக்கப்பட்டு தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இதனை வாங்க நினைப்பவர்கள் தங்கள் ஒப்பந்தப்புள்ளியை சமர்பிக்க வருகின்ற நவம்பர் 30 மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.