இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தில் அதிக அளவில் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆய்வகம் ஒன்று ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதே போல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தினை உஸ் பேக்கிஸ்தானை சேர்ந்த குழந்தைகள் உட்கொண்டதன் விளைவாக 18 குழந்தைகள் இறந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த டிசம்பரில் டாக் ஒன் மேக்ஸ் என்ற இருமல் மருந்தினை அருந்திய குழந்தைகள் இறந்தனர். இந்தியா இருமல் மருந்துகளை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இறக்குமதி செய்கின்றது. இந்த சம்பவம் நடந்ததை அடுத்து பல நாடுகளிலும் இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்பொழுது சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தானது ஈரான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தற்பொழுது ஆய்வறிக்கையின் படி எத்திலின் கிளைகால் எனப்படும் மருந்தானது அளவுக்கு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இருமல் மருந்தில் இந்த ரசாயனமானது 0.1 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் ஈரானில் ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தில் 21% இந்த ரசாயனம் கலந்திருப்பதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. எனவே குழந்தைகளுக்கு இருமல் மருந்து உபயோகிக்கும் போது குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அதன் பிறகு இந்த எடுத்துக் கொள்வது சிறந்தது.