சிங்கப்பூர் ஆசிய கண்டத்தின் மிக முக்கிய நாடு! நாளுக்கு நாள் பெருகிவரும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் மேம்பாடுகள் காரணமா இந்த நாட்டை நோக்கி வேலைக்காக படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போகுது.
அப்படி இங்க வரும் மக்களுக்கு பிரதானம் தங்க ஒரு இடம்! அதாவது ஒரு நல்ல வாடகை வீடு! அதை எப்படி கண்டுபிடிப்பது? அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாடகை வழிமுறைகள் என்னென்ன? என்பதைக் குறித்து தான் இந்த பதிவு!
மற்ற ஊர்களைப் போலவே சிங்கப்பூரிலும் பல விதமான வாடகை வீடுகள் கிடைக்கும். அது அமைந்துள்ள இடம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைப் பொருத்து வாடகை மாறுபடும். சிங்கப்பூரில் மொத்தம் 4 வகையான வீடுகள் உள்ளன.
- Public housing (Housing Development Board flats – HDB flats)
- Condominiums
- Landed properties
- Serviced apartments
HDB Flats – இது பொதுவான மற்றும் அணைத்து மக்களும் வசிக்கக்கூடிய அப்பார்ட்மெண்ட் வகை வீடுகளாகும். இதனை Housing Board Flats என அழைப்பர். இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வீடுகள் நிறைந்த பகுதி. 1 பெட்ரூம் முதல் 3 பெட்ரூம் வரை இங்கு வீடுகள் உள்ளன. ஏறத்தாழ 75 சதவிகித சிங்கப்பூர் மக்கள் இது போன்ற வீடுகளில் தான் வசிக்கிறார்கள். இதன் வாடகை தோராயமாக 2000 SGD முதல் 5000 SGD வரை இருக்கும். சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை முறையை நீங்களும் அனுபவிக்க விரும்பினால் இந்த வீடுகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Condominiums – இந்த வகை வீடுகள் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இருக்கும். நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் என அதிக வசதிகள் கொண்டதாக இருக்கும். அமைதியான சுற்றுப்புறங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இது போன்ற வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடு 4800 முதல் 15000 SGD வரை வாடைகை பெரும். நகரத்தில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள வீடுகளுக்கு 3800 முதல் 7200 SGD வரை வாடகையும், ஸ்டூடியோ ப்ளட்களுக்கு 1700 முதல் 6700 SGD வரை வாடகையும் வசூலிக்கப்படுகிறது.
Serviced Apartments – இந்த வகை குடியிருப்புகள், ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும். வீடுகளை சுத்தம் செய்வது, சலவை மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற பல சேவைகளைக் கொண்டு இந்த வகைக் குடியுப்புகள் இயங்குகிறது. ஒரே வீடுகளில் பகிர்ந்து தாங்கும் வசதிகளும் இங்கே உள்ளது. இதன் மாதாந்திர வாடகை 2800 SGD முதல் 8000 SGD வரை வசூலிக்கப்படுகிறது.
Landed Properties – பெரிய குடும்பங்களுடன் உள்ளவர்கள் அல்லது ஒரு விஸ்தாரமான மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விரும்பும் நபர்கள் இந்த வகை வீடுகளை வாடகைக்கு பெறலாம். இது போன்ற வீடுகள் வாடகை அதிகமாகவும் அதே சமயத்தில் அதிக பராமரிப்பு தேவைப்படுபவையாகவும் இருக்கும். பங்களா போன்ற இந்த வகை வீடுகளுக்கு ஏறத்தாழ 35000 SGD வரை வாடகை இருக்கும். மேலும் பங்களாக்களில் அமைந்துள்ள மொட்டை மாடி வீடுகளுக்கும் 8000 முதல் 13000 SGD வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
மேற்கண்ட வீடுகளை வாடகைக்கு பெறுபவர்கள் சில முக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் Public Housing எனப்படும் HDB பிளாட்களை வாடகைக்கு பெறுவோர் அந்த வீடு உரிமையாளரிடம் உள்ள வாடகை விடுவதற்கான அனுமதி ஆவணத்தை சோதிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் வாழும் மக்கள் HDB பிளாட்களை வாங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே அதனை வாடகைக்கு அளிக்க முடியும். அதற்கான அனுமதி ஆர்வங்களும் கொடுக்கப்படும். மேலும் நிரந்தர குடியுரிமை கொண்டவர்கள் தங்கள் HDB பிளாட்களை வாடகைக்கு விட அனுமதி இல்லை. குறைந்தபட்ச வாடகை ஒப்பந்தகாலம் 6 மாதங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை. இந்த வகை வீடுகளில் உள்வாடகை முறை தடை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து private Housing-கை தேர்வு செய்பவர்களுக்கான குறைந்தபட்ச வாடகை ஒப்பந்தகாலம் 3 மாதங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள். வீடுகளின் வாடகை அது அமைந்துள்ள இடம் மற்றும் வசதிகள் குறித்து மாறுபடும். இந்த வகை வீடுகளில் உள்வாடகை முறைகளுக்கு அனுமதி உண்டு. வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று குறைந்த மற்றும் நீண்ட கால இடைவெளிகளுக்கு உள்வாடகை பெறலாம்.
சிங்கப்பூருக்கு வந்ததும் உங்களுக்கான வீடுகளை தேர்ந்தெடுக்க மேற்கண்ட வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இங்கு பல ஆன்லைன் தளங்கள் வீடுகள் கண்டறிய செயல்படுவதால் அதனை பயன்படுத்தி எளிதாக உங்களுக்கேற்ற வீடுகளைக் கண்டறியலாம். மேலும் இதற்காக ஏஜெண்டுகளும் இங்கு உள்ளனர்.
- PropertyGuru
- 99.co
- EdgeProp
- SRXProperty
என்ற இணையதளங்களை பயன்படுத்தலாம்.