சிங்கப்பூரில் வேலைக்காக செல்ல ஆசைப்படும் இளைஞர்களுக்கு முதல் படியாக இருப்பவர்கள் தான் ஏஜென்ட். அப்படி இருக்கும் ஏஜென்ட்டை சரியாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே உங்கள் கல்வி தகுதிக்கான சரியான வேலை கிடைக்கும். ஏனெனில் இந்த துறைகளிலும் கூட ஏமாற்று வேலைகள் நிறைய அதிகரித்து விட்டது.
இதனால் ஏஜென்ட்டினை முடிந்தவரை தெரிந்தவராக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். அப்படி யாரும் தெரியவில்லை என்றால் ஏற்கனவே சிங்கப்பூர் சென்றவர்களின் உதவியோடு ஒருவரை தேடும்படி பார்த்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு சிங்கப்பூரில் நல்ல வேலை அமையும். தெரியாதவர்களோ இல்லை விளம்பரத்தில் பார்த்தவர்களோ உங்களின் காசை வாங்கி கொண்டு ஏமாற்ற கூட செய்யலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களே… MOM சொல்லும் ஏஜென்சி கட்டணம் இவ்வளவு தான்… இத படிங்க பல லட்சங்களை Save பண்ணலாம்
ஏஜென்ட்டிடன் உங்களின் கல்வி தகுதியை கூற அதற்கேற்ப வேலை தேட சொல்லுங்கள். ஏதோ ஒன்னு கிடைச்சா போதும் என்ற மனநிலையில் இருக்காதீர்கள். வேலை என்பது எதிர்காலம். அதில் குளறுபடிகள் இருக்கவே கூடாது. அவர்கள் சொல்லும் வேலை குறித்து நன்கு தெரிந்து கொள்ளுங்கள். நல்ல ஏஜென்ட் எப்போதுமே உங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப தான் வேலை தேடிக்கொடுப்பார்கள்.
சிங்கப்பூரில் உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து கூறும்போது எப்போதுமே IPAல் இருப்பது தான் ஒரிஜினல். நீங்க சிங்கப்பூர் போனால் மாறும் என ஏஜென்ட் சொன்னால் நம்ப வேண்டாம். அப்படி சொல்பவர்களிடம் ஏமாற்று வேலை இருக்கும்.
ஏஜென்ட் கட்டணம் கொடுக்கும் போது ஒன்றுக்கு இருவரிடம் விசாரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பாஸிற்கு வேறு விதமாக கட்டணம் கோரப்படும். அதனால் முதலில் அட்வான்ஸ் கொடுக்கும் போது சின்ன தொகையை மட்டுமே கொடுக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். IPA வந்தபிறகே மற்ற தொகையை கொடுக்கலாம்.
சிங்கப்பூரில் உங்களுக்கான ஏஜென்சி குறித்து சொந்த நாட்டில் இருக்கும் ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். MOM சைட்டில் சென்று அந்த ஏஜென்சி குறித்து டைப் செய்தால் அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாங்கி தந்திருக்கிறார்கள். இந்த துறையில் எத்தனை வருட அனுபவம் என அனைத்தும் தெரிந்து விடும். அவர்களை வைத்தும் தமிழ்நாட்டில் இருக்கும் உங்க ஏஜென்ட் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.