TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேட “கூகுள் Search” தேவையில்ல.. 15 நொடிகளில் அனைத்து வேலை வாய்ப்பும் உங்கள் முன்னே.. வியக்க வைக்கும் “Perplexity AI” !

தண்ணீர் இல்லாமலோ, உணவு இல்லாமலோ நம்மால் ஒரு நாள் அல்ல 2 நாள் கூட தாக்குப்பிடித்துவிடலாம், ஆனால், காற்று இன்றி ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. அப்படிப்பட்ட காற்றை போன்றது “Google” இந்த டிஜிட்டல் யுகத்தில்.

தேடல்.. அதாவது ‘Search’ என்பதன் முடிவில்லா ஆழ்கடல் இந்த Google. இதுநாள் வரை நமக்கு ஒரு விஷயம் குறித்து தெரிய வேண்டும் என்றால், நமக்கு தகவல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த… கொண்டிருக்கும் கூகுளின் உதவி இனி மெல்ல மெல்ல குறையலாம் என்பதே இந்த கட்டுரையின் சாராம்சம்.

ஆம்! Artificial Intelligence குறித்து சமீப காலமாக நீங்கள் நிறைய விஷயங்களை பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள் அல்லது உபயோகப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அதைப்பற்றி ரொம்ப ஆழமாக பேசி உங்களை குழப்பி விடப் போவதில்லை. ஆனால், சிம்பிளாக உங்களது Resume-ஐ தயாரிப்பது முதல், உங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை நீங்கள் மிக எளிதாக AI மூலம் நீங்கள் எப்படி பெறலாம் என்பதே முடிந்த வரை சிம்பிளாக சொல்ல முயற்சித்துள்ளது நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி குழு.

சரி விஷயத்துக்கு வருவோம். தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் நாம் உங்களுக்கு Suggest செய்ய விரும்பும் பல AI டூல்ஸ் அடங்கிய தளம் தான் “Perplexity”. இதன் ஸ்பெஷாலிட்டியே பலவிதமான குணங்கள், ஸ்பெஷாலிட்டிகள் நிறைந்த AI ஆப்ஷன்கள் தன்னகத்தே கொண்டிருப்பது தான்.

புரியும்படி சொல்லவேண்டுமெனில், நீங்கள் கேட்கவும் கேள்விகளுக்கு ஒரே இடத்தில, 6 வெவ்வேறு விதமான தன்மைகள் கொண்ட AI ஆப்ஷன்ஸ் மூலம் பதில்களை பெற முடியும்.

நான் ‘ChatGPT’ யூஸ் செய்கிறேனே.. எனக்கு எதற்கு இந்த டூல்? என்று சிலர் கேட்பதும், நினைப்பதும் எங்களுக்கு புரிகிறது. இந்த ‘Perplexity’ தளத்தில் ChatGPT உட்பட 6 முக்கிய AI ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கேட்ட கேள்விக்கு, ChatGPT கொடுத்த பதில் உங்களுக்கு திருப்திகரமாக இல்லையெனில், இன்னும் மீதமுள்ள 5 வெவ்வேறு AI மூலம் நீங்கள் உங்களுக்கான பதில்களை பெறலாம்.

Perplexity Pro Search

Sonar Large

GPT-4o

Claude 3.5 Sonnet

Claude 3 Opus

Sonar Huge

என்று நாம் மேலே குறிப்பிட்டது போல் 6 விதமான AI ஆப்ஷன்கள் உள்ளன.

குறிப்பாக, வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு இந்த தளம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. நமது சிங்கப்பூரில் வேலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் ஏஜென்ட்கள் மூலம் இங்கே வருகின்றனர். வெகு சிலர், இந்தியாவில் அவர்கள் பணிபுரியும் கம்பெனி மூலம் வருகின்றனர். மிக சொற்பமானோர், வேலைவாய்ப்பு தளங்கள் மூலம் விண்ணப்பித்து, இன்டெர்வியூ அட்டென்ட் செய்து, வேலைக்கு வருகின்றனர். இவர்களுக்கு சிங்கப்பூருக்கு வருவதற்கான டிக்கெட் கட்டணத்தைத் தாண்டி வேறு எந்த செலவும் கிடையாது. ஆனால், நாம் முன்பே சொன்னது போல், இப்படி வருபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இதற்கு காரணம், வேலைவாய்ப்பு குறித்த தேடல்கள் மிக குறைவாக இருப்பதுதான். “ஏஜென்ட் கிட்ட பணத்தை கொடுத்தால், எப்படியும் வேலை கிடைத்துவிடும்” என்ற மனநிலையும், வெப்சைட்ஸ் மூலம் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்ற நிலையும் தான் காரணம்.

இப்படிப்பட்ட சூழலில், Perplexity போன்ற தளங்களின் ஆதரவு என்று மிக முக்கியமாகிறது. நீங்கள் இந்த Search-இல் “Recent Jobs in Singapore for Indians” என்று டைப் செய்தால் போதும். கூகுள் பேஸ்புக், லிங்க்ட் இன், ட்விட்டர், யூடியூப் என்று அனைத்து சமூக தளங்களில் சமீபத்தில் பதிவிடப்பட்ட சிங்கப்பூர் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அப்படியே கொண்டு வந்து உங்களிடம் கொட்டிவிடுகிறது.

இதில் Free Version, Paid Version என்று இரண்டுமே இருக்கிறது. உங்களின் தேவைக்கு ஏற்றாற்போல் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts