சிங்கப்பூரில் வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்த வேலைக்கு பிடிக்காத பட்சத்தில் அதிலிருந்து மாற வேண்டும் என நினைத்தால் அதற்கு முன்னர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களது எதிர்காலத்திற்கு நல்லதாகவே இருக்கும்.
முதலில் தெரிந்த ஏஜென்டை வைத்து உங்களுக்கு தகுதியான வேலையை பார்க்க சொல்லுங்கள். தெரியாதவர்களையோ, வெறும் விளம்பரங்களையோ நம்பி யாருடமும் லட்சக்கணக்கில் கட்டி வெளிநாட்டு பயணம் செய்யாதீர்கள். அவர்களில் சில போலிகளும் இருக்கத்தான் செய்வார்கள்.
இதையும் படிங்க: எப்படியெல்லாம் ரூல்ஸ் கொண்டுவர்றாங்க… பெத்தவங்க பண்ணதுக்கு நாங்க பலியா..!ஒற்றை பெயர் இருந்தா இது முடியவே முடியாது..!
தங்களது சுயலாபத்திற்காக பொய்களை சொல்லி உங்களுக்கு ஏதோ வேலையை வாங்கி கொடுத்து விடுவார்கள். சிங்கப்பூர் வந்தாகி விட்டாது. சேர்ந்திருக்கும் வேலை பிடிக்கவில்லை. வேறு கம்பெனிக்கு மாற என்ன செய்யலாம்?
நீங்கள் மாற விரும்பும் கம்பெனிக்கு முதலில் பேசி விடுங்கள். அவர்கள் உங்களை எடுக்க ஒப்புக்கொண்டால் பழைய கம்பெனியின் Trans-Letter வாங்கி கொள்ளுங்கள்.
புதிதாக செல்ல இருக்கும் கம்பெனி உங்களுக்கு IPA விண்ணப்பிப்பார்கள். இதற்கு 10ல் இருந்து 15 நாட்கள் எடுக்கும். இது ஒப்புதல் பெற்று உங்கள் புதிய கம்பெனி பாண்ட் மற்றும் இன்சூரன்ஸ் வேலைகளுக்காக் ஒரு 6 நாட்கள் எடுத்து கொள்வர். அதை தொடர்ந்தே IPA லெட்டர் கிடைக்கும். இது சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டிய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு சான்றிதழ்.
இந்த நேரத்தில் Trans-Letter வாங்கியவுடன் உங்களை பழைய கம்பெனி கொடுத்த ரூமில் இருந்து காலி செய்ய சொன்னால் அதில் ஒரு தெளிவுடன் இருங்கள். புதிய கம்பெனியில் இருந்து IPA கிடைக்கும் வரை அந்த ரூமை காலி செய்யக்கூடாது. புது கம்பெனிக்கு போகும் வரை உங்கள் பாதுகாப்புக்கு பழைய கம்பெனி தான் முழு பொறுப்பு.
இதையும் படிங்க: டிகிரி படித்தவர்களும், படிக்காதவர்களும் ரெடியாக இருங்க… உங்களுக்கு சிங்கப்பூரில் சூப்பர் வேலை கிடைக்க இதை Follow பண்ணுங்க…
அவர்கள் சொல்கிறதால் நீங்கள் அந்த ரூமை காலி செய்யும் பட்சத்தில் எங்கள் ஊழியரை காணும் என அவர்களால் புகார் கொடுக்க முடியும். இதை தொடர்ந்து நீங்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள். இதனால் உங்களால் மீண்டும் சிங்கப்பூரே வர இயலாது.
தொடர்ந்து யாரும் மிரட்டினால் கூட கவலையே படாமல் MOM-ஐ தொடர்பு கொண்டு உங்கள் பிரச்னையை கூறினால் அவர்கள் உங்களுக்கான எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி செய்ய முயற்சிகளை எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.