சிங்கப்பூர் வேலைக்கு அப்ளே செய்வதில் பலருக்கும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏஜென்ட்டினை பார்த்து பணம் கொடுத்தால் போதும் அவரே நமக்கு வேலை பார்த்து கொடுத்துவிடுவார் என்ற எண்ணம் கூட பலருக்கும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் லட்சத்தில் காசு கொடுப்பதற்கு முன்னதாக நீங்களே வேலைக்காக சில காலம் உங்க சொந்த நாட்டில் இருந்தே தேடுதல் வேட்டையை நடத்துங்கள்.
இது பெரிய கஷ்டமான வேலையில் இல்லை. இருந்தும் இதற்கு ரொம்ப முக்கியமானது அதிகாரப்பூர்வமான கம்பெனிகள் குறித்து நீங்க நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த தகவலை சிங்கப்பூரில் உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். அப்படி யாரும் தெரியாத பட்சத்தில் குகூளில் சென்று கம்பெனி குறித்து தேடுங்கள். அதில் கிடைக்கும் கம்பெனி விவரங்கள் குறித்து தெளிவாக படித்து பாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு அந்த நிறுவனம் குறித்து ஓரளவு பிடிப்பட்டு விடும்.
தொடர்ந்து இத்தகைய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக கம்பெனி வெப்சைட் இருக்கும். அதில் சென்றால் அவர்களே வெளிநாட்டு ஊழியர்களின் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பதிவிட்டு இருப்பார்கள். அது careers அல்லது jobs அல்லது recruitment என்ற பெயரில் இடம் பெற்று இருக்கும். அந்த பக்கத்தில் அவர்களுக்கு தேவைப்படும் துறைகளுக்கான வேலை வாய்ப்பு தகவல்கள் தெளிவாக போடப்பட்டு இருக்கும்.
உங்களின் கல்வி தகுதி, அனுபவம் இதை வைத்து அவர்கள் கொடுத்திருக்கும் வேலையில் உங்களுக்கு செட்டாவதை தேர்ந்தெடுங்கள். அதற்கு அப்ளே கொடுக்கலாம். இது இரண்டு வழிகளில் இருக்கும். ஒன்று அந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க கம்பெனியின் குறிப்பிட்ட ஈமெயில் ஐடி கொடுக்கப்பட்டு இருக்கும். சில நிறுவனங்கள் linkedin மூலமாகவும் அப்ளே செய்யும்படி கூறியிருப்பார்கள்.
இதற்கு உங்களின் Resume தெளிவாக ரெடி செய்து வைத்திருங்கள். இது தான் உங்களின் முதல் அடையாளம் என்பதால் அதில் எல்லாவற்றினையும் எளிதாகவும், தெளிவாகவும் பதிவிடுங்கள்.அதுப்போல, ஒரு நிறுவனத்திற்கு போட்டால் உடனே வாய்ப்பு கிடைத்து விடாது. நிறைய கம்பெனிகளுக்கு அப்ளே செய்யுங்கள். இதற்கு பதில் வர அதிகம் 10 முதல் 20 நாட்கள் கூட ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிக்க வெப்சைட் வைத்திருக்கும் சில நிறுவனங்கள் குறித்து கீழே பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த நிறுவனங்களின் வெப்சைட்டில் உங்களுக்கான எல்லா தகவலும் இடம் பெற்று இருக்கும். இது எங்களின் கள ஆய்வில் கிடைத்த தகவல்கள் தான். இன்னும் நிறைய நிறுவனங்கள் இதைப்போல வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தகவல்களை அவர்தம் வெப்சைட்டில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- https://www.kinergy.com.sg/careers/
- https://www.wohhup.com/careers/
- https://bike.shimano.com/en-SG/information/CAREERS.html
- https://careers.hitachi.com/search/jobs/in/country/singapore
- https://www.emerson.com/en-sg/careers