PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.
அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.
மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.
Post Name: Port Ecosystem Assistant (Warehouse Assistant)
- ஆர்டர் பட்டியலின்படி, அடுக்கு அலகுகளிலிருந்து (flow racks) பொருட்களை எடுத்தல்.
- பொருட்களை மீண்டும் பேக்கிங் மற்றும் லேபிள் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றுதல்.
- தேவையான பொருட்களைக் கவனமாக பேக்கிங் செய்தல்.
- பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்தல்.
தேவையான தகுதிகள்:
- NITEC / GCE ‘O’ நிலை தகுதி மற்றும் கிடங்குச் சூழலில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பல பணிகளை ஒரே நேரத்தில் கையாளும் திறன் வேண்டும்.
- Class 3 ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
Port Ecosystem Operator (with warehouse forklift license / reach truck experience):
பணி மற்றும் பொறுப்புகள்:
ஒரு கிடங்கு ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டராக, நீங்கள் தினசரி கிடங்கில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இடமாற்றம் செய்யும் பணிகளுக்குப் பொறுப்பாக இருப்பீர்கள். பாதுகாப்பான மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதிப்படுத்த, கிடங்கு மேற்பார்வையாளர், லாரி ஓட்டுநர்கள் மற்றும் மற்ற கிடங்குப் பணியாளர்களுடன் நீங்கள் நெருக்கமாகப் பணியாற்றுவீர்கள்.
- கண்டெய்னர்கள் கொண்ட லாரிகளில் இருந்து பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல்.
- கிடங்கில் உள்ள சேமிப்பு அலமாரிகளில் இருந்து பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல்.
- சரக்குகள் / பலகைகளை அவிழ்த்து முடித்தவுடன் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றுதல்.
- கிடங்கிற்குள் உபகரணங்களை இயக்கும்போது பாதுகாப்பைக் கடைப்பிடித்தல்.
- பிற கிடங்கு நிர்வாகப் பணிகளுக்கு உதவுதல்.
- கிடங்கில் தேவைப்படும் பிற தற்காலிகப் பணிகள்.
தேவையான தகுதிகள்:
ஃபோர்க்லிஃப்ட் (forklift) மற்றும் ரீச் டிரக் (reach truck) உரிமம் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் கிடங்கில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2025