TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வரும் வெளிநாட்டு பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய விதிகள்…MOM கொண்டு வந்த புதிய மாற்றம்

முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இருவரும் பயன்பெறும் வகையிலும், சுமூகமான பணி சூழலை ஏற்படுத்தும் வகையிலும் சிங்கப்பூர் Ministry of Manpower (MOM) வெளிநாட்டு பணியாளர் கொள்கையில் சில மாற்றங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் 2025ம் ஆண்டு ஜனவரி 01 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் தங்களின் விண்ணப்பங்களை புதுப்பிப்பவர்கள் இந்த மாற்றப்பட்ட விதிகளின் படியே விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

MOM கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் :

  • வெளிநாட்டு பணியாளர்கள் employment passக்கு தகுதி பெறுவதற்கு அவர்களின் குறைந்த பட்ச மாதாந்திர சம்பளம் அளவு 5000 முதல் 5600 சிங்கப்பூர் டாலர்களாக இருக்க வேண்டும்.
  • இந்த சம்பள அளவு என்பது வயது அடிப்படையில் தொடர்ந்து அதிகரிக்கும். 40 களில் வயது உடையவர்களின் சம்பள 10,700 டாலர்களாக இருக்க வேண்டும்.
  • employment pass பெறுவதற்கான சம்பள வரம்பு உள்ளூர் PMET1 wages பணியாளர்களின் அடிப்படைய சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும். இது அதிக தகுதி உடையவர்கள் மட்டுமே employment pass பெற முடியும் என்பதை உறுதி செய்யும்.
  • நிதித்துறையில் இருப்பவர்கள் employment pass பெறுவதற்கு அவர்களின் மாதாந்திர சம்பளம் முன்பு 5500 டாலர்களில் இருந்து, 6200 டாலர்கள் வரையிலானதாக இருக்க வேண்டும். 40 வயதுடைய தனி நபராக இருந்தால் அவரின் சம்பளம் அளவு 11,800 சிங்கப்பூர் டாலர்களாக இருக்க வேண்டும்.
  • LQS சம்பள விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பணியாளர்களின் சம்பள அளவு மாதத்திற்கு 1400 முதல் 1600 டாலர்கள் வரை இருக்க வேண்டும் என்பதை முதலாளிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது 2024 ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கும் போது முழு நேர உள்நாட்டு பணியாளர்களகின் சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்களாக இருக்க வேண்டும்.
  • s pass பெறுவதற்கான சம்பள அளவும் 3000 லிருந்து 3150 சிங்கப்பூர் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • போலியான கல்வி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றுபவர்களை தடுப்பதற்காக கூடுதலாக 2 பிரிவுகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மூத்த பணியாளர்களுக்காக cpf அளவு 2024ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது.
  • பணியிடங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம் அறிமுகம்.
  • முதல் முறையாக வேலைக்கு வந்தவர்களின் employment pass 2 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். புதுப்பிக்கப்பட்ட employment pass கள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
  • s pass தகுதி பெறுவதற்கான சம்பள அளவும், levy யும் 2024ம் ஆண்டில் உயர்த்தப்படும். s pass என்பது employment pass விட குறைவான மதிப்புடையது தான்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts