TamilSaaga

வேலைவாய்ப்பைப் பற்றிய MOM-ன் சமீபத்திய Update! எதை விட எது அதிகம்?!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இறுதி வேலைவாய்ப்புத் தரவறிக்கையில் MOM குறிப்பிட்டுள்ள தகவல் சற்று வித்தியாசமாக இருந்தது. அதன்படி வேலை தேடுபவர்களை விட வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

2024 மார்ச் மாதத்தில் 81,900 வேலைவாய்ப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இது 2023 டிசம்பர் மாத எண்ணிக்கையை விட சற்று அதிகம். சென்ற வருடம் டிசம்பர் மாத அறிக்கைப்படி 79,800 வேலை வாய்ப்புகள் பதிவாகியுள்ளன.

இது போன்ற வேலை வாய்ப்பு அதிகரிப்பு 2024-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியுள்ளதை வெளிப்படுத்துவதாக MOM தெரிவித்துள்ளது.

மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பகுதி அதிக உற்பத்தித் திறனும், ஊதியமும் கொண்ட துறைகளில் பதிவாகியுள்ளன. இதில் சுகாதாரத் துறைகள், சமூக சேவைகள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு, தொழில்முறை சேவைகள், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள் அடங்கும்.

வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், வேலை வாய்ப்புகள் மற்றும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை விகிதம் 2023 டிசம்பர் மாதத்தில் 1.74-ஆக இருந்து ஆனால் 2024 மார்ச் மாதத்தில் 1.56 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது தான் என்று MOM தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், Retrenchment இரண்டாவது முறையாக கணிசமாகக் குறைந்துள்ளது. 2023 டிசம்பர்-ல் 3,460 இருந்து 2024 முதல் காலாண்டில் அதாவது மார்ச் மாதத்தில் 3,030 ஆக குறைந்துள்ளன.

2024 முதல் காலாண்டில் Retrenchment விகிதம் 1,000 ஊழியர்களுக்கு 1.3 ஆகும். இது 2023 மூன்றாவது காலாண்டின் 1.9 விகிதத்தை விட சற்று குறைவாக உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பை விடவும் இது குறைவு தான் என MOM குறிப்பிட்டுள்ளது. 2015 முதல் 2019 வரை Retrenchment விகிதம் சராசரியாக 1.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Wholesale துறையில் Retrenchment எண்ணிக்கை 2023 நான்காவது காலாண்டில் 510 இருந்து 2024 முதல் காலாண்டில் 330 ஆக குறைந்துள்ளது.

மின்னணு உற்பத்தியில் இது 540 இருந்து 190 ஆக குறைந்துள்ளது.

தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையிலும் Retrenchment எண்ணிக்கை 620 இருந்து 580 ஆக குறைந்துள்ளது. ஆனால் மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் துறையில் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளதாக MOM தெரிவித்துள்ளது.

MOM  வெளியிட்ட இந்த காலாண்டு அறிக்கை பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும் விதத்தில் அமைந்துள்ளது. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ஆட்டக்குறைப்பு விகிதம் குறைந்துள்ளதும் நிறுவங்களின் பொருளாதாரம் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 

மேலும் கணிசமாக அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது. எனவே சிங்கப்பூரில் வேலை தேடும் மக்கள் தங்களுக்கான சிறந்த வேலையை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தலாம்.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts