சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புக்களை தெரிந்து கொள்ள, வேலை தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களை அணுகுவதற்க மிகவும் ஏற்ற மாதம் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான 4 மாதங்கள் தான். நிதியாண்டு முடிவடையும் மாதம் என்பதால் இந்த மாதங்களில் தான் ஒவ்வொரு நிறுவவமும் தங்களின் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் என்ன, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பது குறித்த திட்டங்களை வகுத்து, அதற்கான பணிகளை துவக்கும் மாதம். அதனால் இந்த மாதங்களில் உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் மற்றும் மேனேஜர்களை தொடர்பு கொண்டு, வேலைவாய்ப்பு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரில் வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள் :
Beam
Careerbuilder
Freelance Zone
Indeed Singapore
Jobiness
JobisJob India
JobStreet Singapore
Monster Singapore
STJobs
Recruit.net
JobsCentral
LinkedIn
FastJobs
eFinancialCareers
MyCareersFuture
Cultjobs
எந்த இணையதளம் பெஸ்ட் ?
சிங்கப்பூரில் பல்வேறு துறைகளை, பிரிவுகளின் கீழ் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் தளங்கள் பல உள்ளன. இவற்றில் MyCareersFuture என்பது சிங்கப்பூர் அரசால், பல்வேறு பங்குதாரர்களுக்குடன் இணைந்து நிர்வாகிக்கப்படுவதாகும். இதில் வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆகியவை சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேடுபவர்கள் மூலமே அவ்வப்போது வெளியிடப்படும்.
JobStreet Singapore தளம் சிங்கப்பூர் மட்டுமின்றி சர்வதேச வேலை வாய்ப்புக்கள் குறித்த தகவல்களையும் வழங்கக் கூடியதாகும். இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான ஒரு தளமாகும். JobsCentral என்பது சிங்கப்பூரின் பல்வேறு நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை வெளியிடும் முன்னணி தளங்களில் ஒன்றாகும். இதில் வேலை தேடுபவர்கள், தாங்கள் விரும்பும் துறை, இடம், வேலை ஆகியவற்றை தெளிவாக தெரிந்து கொண்டு, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு resume upload செய்து அனுப்பும் வசதியையும் அளிக்கிறது.
LinkedIn, Indeed Singapore ஆகியவை சர்வதேச தளங்கள் என்பதால் சிங்கப்பூரில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இருக்கும் வேலை வாய்ப்புக்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.