TamilSaaga

SIA Engineering நிறுவனத்தில் காத்திருக்கும் Technician வேலைவாய்ப்புகள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

SIA Engineering என்பது சிங்கப்பூர் விமான சேவையில் இயங்கும் விமானங்களின் தொழில்நுட்ப வேலைகளைக் கையாளும் நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் தவிர பிலிப்பைனிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. 1992-ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஏறத்தாழ 32 வருடங்களாக சிங்கப்பூர் விமானங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது சிங்கப்பூர் வழியாக செல்லும் பல விமான சேவைகளின் விமான பராமரிப்பு பணிகளை இந்த நிறுவனம் தான் கையாண்டு வருகிறது.

5000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் Aircraft Technician வேலைக்கு தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு Flygosh Jobs என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 07-06-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07-07-2024 ஆகும்.

இதற்கான நுழைவுத்தகுதி :

  • இரண்டு வருடம் குறிப்பிட்ட துறையில் அனுபவம்
  • பொறியியல் சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் ஒரு கல்வித்தகுதி
  • சிங்கப்பூரில் மற்றும் Shift முறையில் பணிபுரிவதற்கான விருப்பம்
  • ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட தகுதிகள் உடையோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Mechanical (B1) மற்றும் Avionics (B2) பிரிவுகளில் விமானங்களை பராமரிப்பது, பழுது நீக்குவது மற்றும் தர கட்டுப்பாடு சோதனைகளை செய்து முடிப்பது போன்றவை இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும்.

இது தவிர Licensed Aircraft Engineers என்ற வேலையும் இந்த நிறுவனத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

https://flygoshjobs.com/job/Aircraft+Technician/2C25C2C869E2EC423EA18D42643D35E7

மேற்கண்ட லிங்க்-கைக் கிளிக் செய்து அங்கு உள்ள apply now என்ற பொத்தானைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனத்தைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு https://www.siaec.com.sg/ என்ற இணைய பக்கத்தைப் பார்வையிடவும். இது தவிர மேலும் பல வேலைவாய்ப்புகள் இந்த பக்கத்தில் உள்ள career என்ற தேர்வில் பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கு சென்று Asia Pacific என்ற பகுதி தேர்வை க்ளிக் செய்து SIA சிங்கப்பூரில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts