SBS Transit என்பது சிங்கப்பூரின் மிகப்பெரிய பேருந்து சேவையில ஒன்னு. நம்ம ஊரு பிரைவேட் பஸ் மாதிரி. அரசாங்கத்தின் கீழ இயங்கி வரும் தனியார் பேருந்து சேவை. ஏறத்தாழ 3500 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிங்கப்பூர் முழுவதும் இயக்கும் இந்த SBS Transit – ல் ரயில் சேவையும் இருக்கு.
பேருந்துல Single Decker, Double Decker மற்றும் Articulated பஸ் என மூன்று வகையான பேருந்துகள் இருக்கு. இந்த பேருந்து சேவை 1978 ஆம் வருடம் Singapore Bus Service என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 2001 ஆம் வருடம் SBS Transit என்று பெயர் மாற்றப்பட்டு தற்பொழுது ஆயிரக்கணக்கான பேருந்துகளுடன் தினசரி 3.6 மில்லியன் மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்கி வருது.
இதே போல ரயில் சேவையில் MRT – Mass Rapid Transit மற்றும் LRT – Light Rail Transit போன்ற இரண்டு வகையான ரயில்களைக் கொண்டு மொத்தம் 151+ 57 என்ற விகிதத்தில் இயங்கி வருது. இன்னும் எதிர்காலத்தில் பல ரயில்களைக் கொண்டுவரவும் செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கு.
அதற்காக பல ஆட்களை வேலைக்கு எடுக்க இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கு. பொறியாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் என பல வேலைகளுக்கு ஆட்களை நியமிக்க காத்திருக்கு. பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ் மக்களுக்கான இந்த வேலைகள் குறித்த அறிவிப்பு அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்துல வெளியிடப்பட்டிருக்கு.
முதலில் இந்த நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு என்னென்ன விதமான சலுகைகள் உள்ளது என்று பாப்போம்.
- மருத்துவ காப்பீடு
- வருடாந்திர விடுமுறை
- பேறுகால விடுமுறை
- நோய் காரணமாக தேவைப்படும் விடுமுறை
- விபத்துக் காப்பீடு
- வேலை சார்ந்த பயிற்சிகள்
- இலவச போக்குவரத்து
போன்ற எண்ணற்ற வசதிகளை தங்கள் ஊழியர்களுக்கு SBS நிறுவனம் வழங்குகிறது. இது பற்றி மேலும் அறிந்துகொள்ள https://www.sbstransit.com.sg/development-benefits இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
SBS நிறுவனம் தற்பொழுது தங்கள் நிறுவனத்துல பல வேலை வாய்ப்புகளை அறிவிச்சு இருகாங்க. இதற்கான நேர்காணல் Galli Battu Bus நிலையத்துல நடைபெறுது.
என்னென்ன வேலைகள் அங்கு இருக்குனு மேலும் தகவல்கள் கீழே உள்ளன.
- Technical Officer (Quality System/ Projects) – இந்த வேலை பேருந்து குறித்த குறைகளை விசாரிப்பது மற்றும் அது சார்ந்த தீர்வுகளை வகுப்பது. இந்த வேலையின் பிரதான பொறுப்பு விபத்து ஏற்படும் பொழுது அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். மேலும் பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பொழுது அதனை பதிவு செய்து சரி செய்வதற்கான வழிகளை வகுக்க வேண்டும்.
- Technical Officer (Bus Station) – இது பஸ் ஸ்டேசன் சார்ந்த மேற்பார்வைப் பணியாகும். இந்த வேலையின் பிரதான பொறுப்பு பஸ் ஸ்டேஷனில் நடைபெறும் தினசரி வேலைகளை கவனித்துக்கொள்வது. ஏதேனும் இடங்களில் வேலை ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
- Technician (Bus Station) – இந்த பணியின் பிரதான பொறுப்பு, பேருந்தில் ஏற்படும் இயந்திர கோளாறுகளை கண்டறிந்து சரி செய்வது தொடர்பானது. பேருந்துகளை தொடர்ச்சியான பராமரிப்பு பணிக்கு உட்படுத்தி அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் மிக முக்கிய பணியாகும்.
- Customer Service (NEL) – இந்த பணியானது நேரடியாக பயணிகளுடன் தொடர்பு கொள்ளும் களப்பணியாகும். பயணிகளுக்கு தேவையான தகவல்கள், உதவிகள் போன்றவற்றை மேற்கொள்ளும் பணியாகும்.
- LRT Power Supply Technician/ Senior Technician – மின்பகிர்மான அமைப்புகளில் ஏதேனும் பழுதுகள் இருப்பின் அதனை சரி செய்வதும், அதன் தொடர்ச்சியான பராமரிப்பை உறுதி செய்துகொள்வதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும்.
- LRT Power Assistant Engineer – மின்பகிர்மான அமைப்புகளை தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் செயல்பாடு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வதும் அது சார்ந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை மேற்பார்வையிடுவதும் இந்த பணியின் பிரதான பொறுப்பாகும்.
- Rail Power Assistant Engineer (DTL)- இந்த பணியானது ரயில் துறையில் உள்ள மின் பகிர்மான அமைப்புகளைக் கையாள்வதும் அதுகுறித்த மேற்பார்வை மற்றும் பராமரிப்பு சார்ந்தது.இந்த பொறியாளர் மின் பகிர்மான கட்டுப்பாடு மையத்தில் பணிபுரிவார்.
- Rail Power Technician (DTL) – ரயில் துறை மின் பகிர்மான அமைப்புகளை பராமரிப்பதும் அது சார்ந்த தொழில்நுட்பங்களை பராமரிப்பதும் இந்த பணியின் பிரதான கடமையாகும். பொறியாளராகளின் வழிகாட்டுதலின்படி அங்கு உள்ள தொழில்நுட்ப கருவிகளை கையாள்வதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும்.
- Assistant Station Manager (NEL) – இந்த பணியின் முக்கிய கடமை ரயில் நிலையத்தை சார்ந்த பொறுப்புகளைக் கையாள்வது. பயணிகளுக்கு தேவையான தகவல்கள்களை கொடுப்பது, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்க்கு தீர்வுகளைக் கண்டறிவது, ரயில் நிலைய தலைமை அதிகாரிக்கு உதவுவது மற்றும் தினசரி ரயில் நிலைய செயல்பாடுகளைக் கவனிப்பது போன்றவை இந்த பணியின் முக்கிய கடமைகளாகும்.
- [DTL] Assistant Station Manager – Non Executive Role – பயணிகளைக் கையாள்வதும் அவர்களுக்கு தேவையான தீர்வுகள் மற்றும் உதவிகள் போன்றவற்றை செய்வதுமே இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். மேலும் ரயில் நிலைய செயல்பாடுகள் சரிவர இயங்குகிறதா என்பதை பயணிகள் சார்பில் உறுதி செய்துகொள்வதும் இந்த பணியின் முக்கிய கடமையாகும்.
மேற்கண்ட பணிகளுக்கான அடிப்படை பொறுப்புகள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள https://www.jobstreet.com.sg/SBS-Transit-jobs/at-this-company?classification=1209%2C1204%2C1212 இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்.
அல்லது https://www.sbstransit.com.sg/ என்ற இணையத்தளத்தில் “Join Job” என்பதை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Job Listing என்ற தேர்வை கிளிக் செய்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
இது தவிர SBS Transit நிறுவனத்தின் மேலும் பல வேலை வாய்ப்புகளை மேற்கண்ட இணையத்தில் காணலாம்.
எல்லாம் சரி இந்த வேலைக்கு எப்படி Apply செய்வது? அதற்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வேலை வாய்ப்புகளுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. தகுதியுள்ளோர் நேரில் சென்று நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
மே 16 அன்று நடைபெறும் நேர்காணலுக்காக தகவல்கள்:
நடைபெறும் தேதி: 16 – மே – 2024 (வியாழன்)
நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
நடைபெறும் இடம்: Galli Battu MRT Depot
350 Woodlands Road
Singapore – 677730
வேலை வாய்ப்புகள்:
[DTL] Assistant Station Manager
Customer Service (NEL)
Technician (Bus Station)
இது தவிர மேலும் பல வேலை வாய்ப்புகளுக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1) https://www.sbstransit.com.sg/ என்ற இணையத்தளத்தில் “Join Job” என்பதை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Job Listing என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
2) இது Job Street என்ற வேறொரு தளத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.
3) அங்கு SBS Transit-ன் பல வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
4) உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து அதற்க்கான கல்வித்தகுதி, முன்அனுபவம் போன்ற தேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும்.
5) அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னர் பக்கத்தின் மேலே உள்ள Quick Apply என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6) அது உங்களை Login பக்கத்திற்கு இட்டுச்செல்லும்
7) ஏற்கனவே உங்களுக்கு account இருந்தால் Email மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அதனுடன் உங்கள் சுயவிவரத்தையும் இணைத்து விண்ணப்பிக்கவும்.
8) அல்லது புதியதாக அவரு அக்கவுன்ட்டை துவங்கி விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
சிங்கப்பூரின் மிக முக்கிய போக்குவரத்து சேவையில் பணியாற்ற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!