TamilSaaga

உலகின் சிறந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? சிங்கப்பூர் Hyundai-ல் காத்துக்கொண்டிருக்கும் வாய்ப்புகள்!

Hyundai இந்த பெயர பல நாடுகள்ல நீங்க கேட்டு இருப்பீங்க இன்னைக்கு உள்ள கார் கம்பெனிகள்ல மிக முக்கியமான நிறுவனம். 193 நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுது. தென் கொரியாவை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் வருடம் ஒன்றிற்கு 1.6 மில்லியன் எண்ணிக்கைகள் வரை கார்களை தயாரிக்குது. இந்த கம்பெனியில உலகம் முழுவதும் 75,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2022 புள்ளிவிவரத்தின் படி உலகத்தின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக உள்ளது.

அப்படிப்பட்ட கார் கம்பெனியில வேலைக்கு சேரனும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். பல பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என இங்க வேலை வாய்ப்புகளும் அதிகம். ஆனால் எப்படி இங்க வேலைக்கு சேரனும். எங்கெங்க என்னென்ன வாய்ப்புகள் இருக்கு? அதுக்கு எப்படி விண்ணப்பிக்கனும்? இதெல்லாம் பத்தின ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த பதிவு.

நாம மேலே பார்த்தது போல Hyundai நிறுவனம் ஏராளமான நாடுகள்ல அதனுடைய அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவி இருக்கு. நம்ம சிங்கப்பூர்லயும் இதனுடைய அலுவலகம் இயங்கி வருது. இது ஒரு பன்னாட்டு நிறுவனமா இருக்கறதால அங்க வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கி தருது. அது தவிர பணியைப் பொருத்து அவர்களுக்கு காப்பீடுகள் போன்ற வசதிகளையும் செய்து தருது.

எந்த வேலையா இருந்தாலும் இங்க சிறந்த சூழல் உங்களுக்கு இருக்கும். உங்க திறனை எல்லா வகையிலயும் அங்கீகரிக்கவும் சிறப்பா பயன்படுத்தவும் இங்க முழு சுதந்திரம் அளிக்கப்படும். வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலை அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை வேலை பாதிக்காம இருக்கனும்னு யோசிப்பாங்க. அந்த பிரச்னையும் இங்க இல்ல இரண்டையும் சரியா செய்துகொள்ளவும் இது போன்ற பன்னாட்டு நிறுவங்கள் வாரம் இரண்டு நாள் விடுமுறை அல்லது அந்தந்த கம்பெனி விதிகளின்படி குறிப்பிட்ட நேரம் தான் வேலை போன்ற வசதிகளை செய்து தருது

Hyundai Motor Group Innovation Centre In Singapore – HMGIC என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் ஏராளமான வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் அழகான தோற்றம் கொண்ட வாகனங்களை உருவாக்குகிறது. இந்த நிறுவனத்தில் சில வேலை வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கு.

  1. Mobile Robot Software Engineer– இந்த வேலை மென்பொருள் உற்பத்தி சார்ந்தது. மொபைல் ரோபோட் தொடர்பான முழுமையான  மென்பொருளை உருவாக்கி அது தொடர்பான சேவைகளை வழங்குவைத்தே இந்த வேலையின் பொறுப்பு.
  2. அடுத்ததுMobile Robot Proces Engineer இந்த பணி முழுக்க முழுக்க கார் உற்பத்தி சார்ந்தது. மொபைல் ரோபோட் மென்பொருளைப்பற்றின புரிதலுடன் கார் உற்பத்தியில் பணிபுரிவதே இதன் பொறுப்பு.  உற்பத்தியின்பொழுது அனைத்து செயல்திறனும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வதுடன் உற்பத்தி வேகத்தையும் முறையாக கையாள வேண்டும்.
  3. CLoud Platform & PLC-OT Engineer – இவைஇரண்டும் முழுக்க முழுக்க மென்பொருள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பைச் சார்ந்த வேலைகள் ஆகும். Cloud Platform Engineer வேலை என்பது நிறுவனத்திற்குள் செயல்படும் மென்பொருள் சார்பான அனைத்து தரவுகளையும் கையாள்வதாகும். PLC & OT Engineer PLC மென்பொருள் உருவாக்கம் மற்றும் அதன் பராமரிப்பைக் குறித்த வேளைகளில் ஈடுபடுவார்.
  4. AI Engineer – Artificial Intelligence Engineer இப்போதையகாலகட்டத்தில், அனைத்து துறைகளிலும் AI-ன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையும் அதற்க்கு விதிவிலக்கல்ல. Hyundai நிறுவனத்தில் இதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் செயலாக்கங்கள் நடந்துவருகிறது. அதில் பணிபுரிவதே இந்த வேலை.
  5. Quality Control & Mobile Robot Technician- இந்தஇரண்டு பணிகளும் உற்பத்தி மற்றும் தர கட்டுப்பாடு சார்ந்தது. உற்பத்தி செய்யப்பட்ட  வாகனங்களின் செயல்திறனை தர கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தி அதன் செயல்திறனை சரிபார்ப்பதே Quality Control Technician வேலை. அப்படி தர கட்டுப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்களில் ஏதேனும் பழுது இருப்பின் mobile robot technician அதனை சரிசெய்ய வேண்டும். வாகனம் மற்றும் அதன் ஒவ்வொரு பாகங்களும் சரிவர பொருத்தப்பட்டு அதனை முழுமையாக தயார் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அனைத்து வேலைகளுக்குமான தேவைகள் Hyundai சிங்கப்பூர் நிறுவனத்தில் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான தகுதி மற்றும் அதைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு https://careers.hmgics.com/ என்ற இணையத்தைப் பார்வையிடவும். மேலும் அதில் சென்று எப்படி உங்கள் வேலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • முதலில் https://careers.hmgics.com/ -இணையத்தளத்தைக் க்ளிக் செய்யவும்.
  • முகப்புபக்கத்தில் மேலே மூன்றாவதாக உள்ள “ Search Job” என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில்Hyundai நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும்.
  • உங்களுக்குதேவையான அந்த வேலையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த வேலையைக் குறித்த முழுமையான தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொன்றையும்கவனமாக ஆராய்ந்த பின்னர் apply செய்ய கீழே உள்ள APPLY என்ற பொத்தானை தேர்வு செய்ய வேண்டும்.

எப்படி குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிப்பது! 

  • மேலேகுறிப்பிட்டது போல் Apply பொத்தானை க்ளிக் செய்தவுடன் அது Login பக்கத்திற்கு செல்லும்.
  • வேலைக்குapply செய்யும் முன் உங்களுக்கான புதிய account create செய்யப்பட வேண்டும்.
  • ஒருவேளை ஏற்கனவே உங்களுக்கு Hyundai Career Account இருந்தால் login செய்துகொள்ளுங்கள்.
  • உள்ளேசென்றவுடன் உங்கள் பெயர், முகவரி,போன்ற அடிப்படையான தகவல்களையும் உங்கள் படிப்பு சார்ந்த தகவல்கள் உங்கள் சுயவிவரம் என அங்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் வேலை மற்றும் நீங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்பதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேலை விதிமுறைகள் மாறுபடும். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டினராக இருந்தால் உங்கள் பாஸ்போர்ட் சார்ந்த விவரங்களும் தேவைப்படும். எனவே அனைத்திற்கும் முதலில் அடிப்படையான விவரங்களை சமர்ப்பித்த பின் உங்கள் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நிறுவன அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்வர்.

அதன் பின் கீழ்கண்ட முறைகளின் படி பணியாளர்களை தெரிவு செய்வர்

  1. விண்ணப்பம்சமர்ப்பித்தல்
  2. நிறுவனஅதிகளாரிகளால் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தெரிவு செய்யப்படும்
  3. ஆன்லைன்மூலம் வேலை அதிகாரியின் (Hiring Manager) நேர்காணல்
  4. போட்டித்தேர்வுமற்றும் HR உடனான நேர்காணல்
  5. HMGICS தலைவருடனானநேர்காணல்
  6. இறுதியாகவேலை வாய்ப்பு

மேல்கண்ட தகவல்களைக் கொண்டு சிங்கப்பூர் Hyundai-ல் உங்கள் கனவு வேலையைக் கண்டிடுங்கள்! வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்  

Related posts