TamilSaaga

Interview-வில் Smart ஆக பதில் சொல்ல இதோ 10 அட்டகாசமான Tips!

என்ன தான் படிப்பு, வேலை என திறமையானவராக இருந்தாலும் Interview என்று வரும் போது அனைவருக்கும் சிறிது பதற்றம் வருவது இயல்பு தான். Interview களில் கேட்கப்படும் மிக சாதாரண விஷயங்களுக்கு கூட நாம் பதிலளிக்கும் விதம் தான் அவர்கள் நம்மை வேலைக்கு தேர்வு செய்வதற்கும், நிராகரிப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. நம்முடைய புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும் என பலரும் பேசும் வார்த்தைகள், பேசும் விதம் தான் அவர்களுக்கு எதிராக அமைந்து விடுகிறது. Interview களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி Smart ஆக பதில் சொல்ல வேண்டும் என தெரிந்து கொள்ள 10 அட்டகாசமான டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Interview-வில் Smart ஆக பதில் சொல்ல டிப்ஸ் :

  1. உங்களைப் பற்றி சொல்லுங்கள் என கேட்டால், சுருக்கமாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் பதிலளியுங்கள். இந்த கால அளவிற்குள் உங்களின் படிப்பு, வேலையில் முன் அனுபவம், கடைசியாக வேலை பார்த்த விபரம் உள்ளிட்ட விபரங்களை சுருக்கமாக சொல்லி விட வேண்டும்.
  2. அவர்களின் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என கேட்டால், அவர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகள், ஆண்டு வருவாய், மதிப்புகள், கொள்கைகள், நிர்வகிக்குள் விதம், அங்குள்ள மக்கள், அந்த நிறுவனத்தின் வரலாறு, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து உங்களுக்கு தெளிவாக தெரிந்தவற்றை பற்றி எடுத்துக் கூறலாம். இது அவர்களின் நிறுவனம் பற்றி நீங்கள் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை காட்டும். அதற்காக அவர்களின் நிறுவனம் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும் என காட்டிக் கொள்ளக் கூடாது.
  3. அவர்களின் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்புவதற்கு என்ன காரணம் என கேட்டால், அந்த நிறுவனம் என்னென்ன விஷயங்களில் ஈடுபடுகிறது, அவற்றில் உங்களை கவர்ந்தது எது, உங்களின் பங்களிப்பை எந்த பிரிவில் அளிக்க விருப்பம் ஏற்பட்டது என்பது பற்றி சொல்லலாம்.
  4. தங்களின் நிறுவனத்திற்கு மற்றவர்களால் செய்ய முடியாத என்ன விஷயத்தை உங்களால் செய்ய முடியும் என கேட்டால், நீங்கள் உங்கள் பணியில் இதுவரை செய்து காட்டிய விஷயங்கள், அந்த துறையில் உங்களின் திறமைகள், உங்களின் துறையில் நீங்கள் செய்து வரை சாதித்து காட்டியவை ஆகியவற்றை சொல்லலாம். அந்த துறையில் உங்களுக்கு ஆர்வம், எந்த அளவிற்கு நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவர் என்பதை காட்ட எவற்றிற்கு எல்லாம் நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள், பிரச்சனைகளை எப்படி கையாளுவீர்கள், உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி எப்படி அந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள் என்பதை விளக்கிக் கூறலாம்.
  5. இந்த வேலைக்கு நீங்கள் என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள் என்ற கேட்டால், யதார்த்தமாக பதில் சொல்லுங்கள். அந்த பதவியின் பொறுப்பு, வேலை தன்மை ஆகியவற்றை பற்றி உண்மையாக நீங்கள் புரிந்து கொண்டிருந்தால் அதற்கு தகுந்தாற் போல் பதில் சொல்லலாம். ஒருவேளை உங்களுக்கு அது பற்றிய தெளிவாக தெரியவில்லை என்றால் இன்டர்வியூ செய்பவரிடமே அது பற்றி கேட்டால், அவர் பதிலளிப்பார்.
  6. உங்களின் முழுமையான பங்களிப்பை அளிக்க எவ்வளவு காலம் ஆகும் என்ற கேட்டால், யதார்த்தமாக பதிலளியுங்கள். முதல் நாளில் இருந்தே அவர்கள் எதிர்பார்க்கும் பங்களிப்பை அளிப்பதாக சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்த நிறுவனத்தை பற்றி தெரியும் என்றாலும் இன்னும் தேவையான அளவிற்கு நன்றாக தெரிந்து கொண்டு, அதிகப்பட்டியான பங்களிப்பை தருவேன் என கூறலாம்.
  7. இந்த பணிக்கு நீங்கள் அதிக தகுதி உடையவர் அல்லது அதிக அனுபவம் உடையவர் என நினைக்கிறீர்களா என்று கேட்டால், நிறுவனத்துடன் நீண்ட கால தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை கூறுங்கள். இந்த வேலையில் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்காக புதிய வாய்ப்புகள் ஏற்படலாம், இந்த நிறுவனத்தில் முன்னேற முடியும் என நீங்கள் நினைப்பதாக சொல்லுங்கள். ஒரு திறமையான நிறுவனத்திற்கு அனுபவமும் திறமையும் வாய்ந்த பணியாளர்கள் தேவை. அதன் அடிப்படையில் இந்த பணிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதால் உங்களை வேலைக்கு அமர்த்தினால் விரைவாக வருமானம் பெருகும் என முதலாளி நினைப்பார் என சொல்லுங்கள்.
  8. உங்களின் நிர்வகிக்கும் தன்மை பற்றி கேட்டால், பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள், எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பீர்கள், நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் அடிமட்டம் வரை எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிய வைப்பது, உடன் பணியாற்றுபவர்கள் மீது அக்கறை எடுத்து அவர்களை சரியான பாதையில் எப்படி வழி நடத்துவீர்கள், பொறுப்புடன் வெளிப்படையான முறையில் நிர்வாகத்தை நடத்தி, மற்றவர்களையும் எப்படி உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பீர்கள் என்பதை கூறலாம்.
  9. தற்போது அல்லது இதற்கு முன் பார்த்த வேலையை எதற்காக விடுகிறீர்கள் என்று கேட்டால், உங்களை பாதிக்காத வகையில் விளக்கமாக, நேர்மையாக பதில் கூறுங்கள். ஏதாவது பிரச்சனை காரணமாக அதிலிருந்து வெளியேறுகிறீர்கள் என்றால் உங்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை நாகரீகமாக சொல்லி முடித்து விடுங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட குறை கூறவோ, குற்றம் சுமத்தவோ வேண்டாம்.
  10. உங்களின் முதலாளி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், உங்களால் முடிந்த அளவிற்கு பாசிடிவாக, நல்ல முறையில் சொல்லுங்கள். அவர்கள் சிறப்பான முதலாளி, நல்லவர் என சொல்ல வேண்டும். வருங்காலத்தில் எப்போதாவது அவரை பற்றி பேசும் போது கூட அதே போன்ற வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts