PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
PSA-வின் வரலாறு:
- 1965: சிங்கப்பூர் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு, துறைமுகம் சிங்கப்பூரின் முதல் மற்றும் முக்கியமான பொருளாதாரத் தூணாக மாறியது.
- 1964: சிங்கப்பூர் அரசாங்கம் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
- 1990: ஐந்து தனித்துவமான துறைமுகங்களாக PSA விரிவடைந்தது.
- 1997: ஒரு கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டு, PSA கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.
அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.
மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.
இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:
Post Name: Lashing Specialists
Job Profile:
- நீங்கள் லாஷிங் உபகரணங்களை பயன்படுத்தி கப்பல்களில் கண்டெய்னர்களை பாதுகாப்பதோடு, கப்பல்களை துறைமுகத்தில் நின்று/புறப்பட செய்யவும் மற்றும் Water Bunkering செயல்பாடுகளில் உதவவும் செயல்படுவீர்கள்.
- நீங்கள் 3 மாத பயிற்சி திட்டத்தில் பங்கேற்க இருப்பீர்கள், இதில் வேலைஅடிப்படையிலான பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளது.
- பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், உங்களுக்கு கண்டெய்னர் லாஷிங் செயல்பாடுகளில் ITE திறன்சான்றிதழ் வழங்கப்படும்.
Eligibility:
- Candidates can be able to lift heavy objects and work at heights
- Willing to work on rotating shift and outdoors
Applications close: 31 Dec 2025
Post Name: Lashing Supervisor
Job Profile:
- PSA-ல் ஓராண்டு பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து, Lashing Supervisorபணியாற்றாலம்.
- ஓராண்டு பயிற்சித் திட்டத்தை முடித்த பிறகு, நீங்கள் லாஷிங் பணிகளைக் கண்காணிப்பீர்கள் மற்றும் லாஷிங் நிபுணர்களின் குழுவிற்கு ஊக்கமளிப்பீர்கள்.
Eligibility:
- Willing to work on rotating shifts and outdoors
- Able to work at heights
Applications close: 31 Dec 2025
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://psacareers.singaporepsa.com/en/listing/ பார்க்கவும்.
ஆன்லைன் விண்ணப்பம்: PSA வேலைவாய்ப்பு பக்கம் அல்லது வேலைவாய்ப்பு போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின்வருவனவற்றை வழங்கவும்:
* Updated CV
* Cover Letter
* Relevant certifications and experience proof.
தேர்வு செயல்முறை:
உங்கள் விண்ணப்பம் மதிப்பாய்வு செய்யப்படும். தகுதியானவர்கள் மேலும் சில தேர்வுகளுக்கு அழைக்கப்படலாம். இது தொழில்நுட்ப தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கலாம். PSA இன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடர்ந்து, நிறுவனம் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு….. எப்படி Apply செய்வது? முழு விவரம்