செக்யூரிட்டி கார்டு வேலை தேடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்காக தான். செக்யூரிட்டி கார்டு வேலை பற்றிய அனைத்து விதமான தகவல்களும், அந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு இருக்கும்? என்னென்ன டாக்குமெண்ட் தேவைப்படும்? ஆகியவை இந்த பதிவில் இடம் பெறும். நீங்கள் சிங்கப்பூரில் செக்யூரிட்டி ஆபிஸர் ஆக வேண்டும் என்றால் செக்யூரிட்டி ஆபிஸர் லைசன்ஸ் நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். இந்த செக்யூரிட்டி ஆபிஸர் லைசன்ஸ் பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிவில் நீங்கள் அறியலாம்.
முதலில், சிங்கப்பூரில் ஒரு செக்யூரிட்டி ஆபிஸரின் சராசரி மாத வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை பார்க்கலாம். சிங்கப்பூர் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் கூட இந்த செக்யூரிட்டி ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். செக்யூரிட்டி ஆபிசர் லைசன்ஸ் பெற்றவர்கள் அனைவருமே செக்யூரிட்டி ஆபீஸ் பணிக்கு தகுதியானவர்கள் ஆவர். ஒரு மாதத்திற்கு சராசரி வருமானமாக ஆயிரம் முதல் 2000 டாலர்கள் வரை பெறலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஊதியம் வேறுபடும். ஆனால் குறைந்தபட்சம் ஆயிரம் டாலர்கள் ஊதியம் பெறுவது சாத்தியமே. அடுத்தது இந்த செக்யூரிட்டி ஆபிஸர் லைசன்ஸ் யார் நிச்சயமாக பெற்று இருக்க வேண்டும்?
கீழ்க்கண்ட வேலைகள் செய்பவர்கள், அல்லது செய்ய விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த செக்யூரிட்டி ஆபிஸர் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். ஒருவரின் சொத்துக்களை அல்லது ஒரு தனி மனிதனை பாதுகாப்பு குறித்து ரோந்து பணிகள் மேற்கொள்பவர்கள். அந்தப் பணிக்காக மோப்ப நாய்களை அல்லது எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள். இத்தகைய செக்யூரிட்டி ஆபீஸர் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். இன்னொருவருடைய சொத்துக்களை பாதுகாப்பவர்கள், திருட்டு மற்றும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பவர்கள் இது சம்பந்தமான பணி செய்பவர்கள் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். பாடிகார்ட் அல்லது பவுன்சர் வேலை செய்பவர்களுக்கு நிச்சயமாக இந்த லைசன்ஸ் தேவைப்படும். ஒரு பொது இடத்தில் அல்லது ஒரு வளாகத்தில் ஒவ்வொருவரையும் ஸ்கிரீனிங் வேலை செய்பவர்களுக்கு இந்த லைசன்ஸ் அவசியம். சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தபவர்களுக்கு இந்த லைசன்ஸ் அத்தியாவசியம்.
அடுத்தது செக்யூரிட்டி லைசன்ஸ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி பார்க்கலாம். செக்யூரிட்டி லைசன்ஸ் விண்ணப்பிப்பதற்கு முதலில் நீங்கள் singpass பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறையிடம் இருந்து செக்யூரிட்டி கிளியரன்ஸ் நிச்சயம் பெற்று இருக்க வேண்டும். இவை இரண்டும் முறையாக பெற்ற பின், PLRD’s இணையதளத்தில் எலிஜிபிலிட்டி செக் செய்யுங்கள். கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விதமான தகுதிகளும் நீங்கள் பெற்று இருந்தால் சிங் பாஸ் அக்கவுண்டை வைத்து GoBusiness எனும் இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஏற்கனவே செக்யூரிட்டி ஆபீஸ் லைசன்ஸ் பெறுவதற்கு பயிற்சி பெற்றிருக்கிறீர்கள் என்றால் அது குறித்த தரவுகளை அந்த இணையதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். பின்னர் 16 டாலர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இவை அனைத்தும் சரியாக முடிந்த பின் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு பின், நீங்கள் மூன்று விதமான ஒரு செக்யூரிட்டி ஆபீஸர் பயிற்சிகளை அப்ளை செய்ய வேண்டும். இந்த மூன்று விதமான பயிற்சிகளை பெற்றவர்கள் மட்டுமே செக்யூரிட்டி ஆபீஸர் ஆக முடியும். இந்த மூன்று விதமான பயிற்சிகள் என்னென்ன? காவலர் மற்றும் ரோந்து சேவைகள் வழங்குதல், பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் சேவைகளை கையாளுதல், பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணித்து அறிதல். இந்த ஒவ்வொரு பயிற்சி எடுப்பதற்கும் 2, 3 அல்லது நான்கு நாட்கள் தேவைப்படும். பயிற்சிகள் எடுப்பதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும். மூன்று விதமான பயிற்சிகளை முழுமையாக முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும். இது போன்ற பயிற்சிகள் எடுப்பதற்கு சிங்கப்பூரில் நிறைய பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பயிற்சி கட்டணம் மற்றும் பயிற்சி பெறும் நாட்கள் வேறுபடலாம்.
இந்த பயிற்சிகளை முழுமையாக முடித்த பின், செக்யூரிட்டி அடையாள அட்டை பெறுதல் வேண்டும். இந்த அடையாள அட்டை பெறுவதற்கு 22 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி கட்டணம் இணையதளத்தில் செலுத்திய பின் நீங்கள் உங்களுக்கான அடையாள அட்டையை பெறலாம். முக்கிய குறிப்பு: மலேசியாவை சேர்ந்தவர்கள் இந்த செக்யூரிட்டி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், சிங்கப்பூரில் ஒர்க் பர்மிட் பெற்றிருக்க வேண்டும், மேலும் குற்றமற்ற தண்டனை சான்றிதழ் (CNCC), நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். மலேசியாவை சேர்ந்தவர்கள் இது போன்ற சான்றிதழ்களை பெறுவதற்கு High Commission of Malaysia in Singapore -ஐ அணுகவும்.
ஏற்கனவே பெற்றிருக்கும் லைசன்ஸ் காலாவதி ஆகப்போகிறது என்றால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.
காலாவதியாகும் செக்யூரிட்டி ஆபீஸ் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கு வினாடி வினா தேர்வு நடத்தப்படும். உங்களுடைய லைசன்ஸ் காலாவதி ஆவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பப்படும். இப்பொழுது நீங்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படும். தேர்வை எழுதுவதற்கு 20 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தேர்வை வெற்றி பெறுவதற்கு பலமுறை நீங்கள் முயற்சிக்கலாம். இந்த பதிவில் மேலே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான தகவல்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றி நீங்கள் சிங்கப்பூரில் செக்யூரிட்டி ஆபிசர் ஆகலாம்.