வேலை உடனடியாக மாறனும் என்று நினைப்பவர்களுக்கான பதிவு இது!
ஏதாவது ஒரு பாஸ் அல்லது work permit மூலமாக சிங்கப்பூர் செல்லும் தொழிலாளர்கள், அதிலிருந்து வேறு வேலைக்கோ அல்லத வேறு கம்பெனிக்கோ அல்லது அதை விட பெரிய கம்பெனிக்கோ மாற வேண்டும் என நினைக்கலாம். ஆனால் பலருக்கும் எப்படி வேலை மாறுவது, எந்த கம்பெனியில் நம்முடைய திறமை ஏற்ற வேலை வாய்ப்பு உள்ளது என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் உதவி கரமாக இருக்கும்.
சிங்கப்பூரில் Walk-in-interview போன்ற அறிவிப்புகள் நம்ம ஊரை போல திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்தி தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அனைத்து கம்பெனிகளிலும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் Walk-in-interview மூலமாக வேலைக்கு சேர்க்கப்படுவதும், வேலையை விட்டு நீக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி எந்த நிறுவனத்தில் வேலை காலியாக உள்ளது என்பதை தெரிந்த கொள்ள ஒரு சில வழிகள் மட்டும் தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள பெரிய நிறுவனங்களில் இணையதளங்களை தினமும் பார்த்து வந்தால் அதில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் போது நேரடியாக இணையதளம் மூலமாகவே apply செய்து, அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம். அல்லத மற்றொரு வழியாக சிங்கப்பூரில் வெளியாகும் தினசரி ஆங்கில newspaper களில் requirement என்ற பகுதி போடப்பட்டிருக்கும். அதில் எந்தெந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளது, எந்த நாளில், எந்த இடத்தில் Walk-in-interview நடக்கிறது என்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிங்கப்பூரில் வெளியாகும் newspaper :
- Good Paper
- Tamil Murasu
- tabla!
- The Business Times
- The New Paper
- The Straits Times
- Today
- TGIF Papers
- Pravasi Express
- The Life News
newspaper தவிர்த்து, சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ள notice board களிலும் பெரிய நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புக்களை வெளியிடுகின்றன. இவற்றின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இதை தவிர்த்து, ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள community centre களிலும் தினசரி வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புக்கள், அது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கும். அதன் மூலமும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.