TamilSaaga

சத்தியம் வாங்கிக் கொண்டு.. கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைத்த பெண் – காலில் விழுந்து கும்பிட்ட முன்னாள் காதலி!

INDIA: ஒரு பெண், தனக்கு மட்டும் சொந்தமான கணவனை வேறொரு பெண்ணுக்கும் விட்டுத் தர முடியுமா? அல்லது தன் வாழ்க்கையை பகிர்ந்து கொடுக்க முடியுமா?

‘இல்லை”… என்பதே பொதுவான பதிலாக இருக்கும். ஆனால், இங்கு ஒரு பெண் அதனை உடைத்து காட்டியிருக்கிறார்.

ஆம்! இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்யாண். பட்டப்படிப்பு முடித்தவர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மூலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணை கல்யாண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் அம்பேத்கர் நகருக்கு வந்தார். அவர் விமலாவை தனியாக சந்தித்து பேசினா். அப்போது அவர், ‛‛நானும் கல்யாணும் டிக்டாக்கில் ஒன்றாக வீடியோ வெளியிட்டு வந்தோம். இருவரும் காதலித்தோம். சிறு கருத்துவேறுபாட்டால் பிரிந்துவிட்டோம். நான் அவரை தேடியும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு வந்த நித்யஸ்ரீ என்ற பெண், கல்யாண் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியை தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர், “கல்யாணும், நானும் காதலித்து வந்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் 2 வருடங்களாக அவரை தொடர்ந்து தேடி வந்தேன். சமீபத்தில் தான் அவருக்கு கல்யாண ஆகிவிட்ட தகவல் எனக்கு கிடைத்தது. என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்கள் இருவரது வாழ்க்கையை தொந்தரவு செய்யக் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், என்னால் அவரை மறந்து இருக்க முடியவில்லை. அதனால், நேரடியாகவே தேடி வந்துவிட்டேன். எங்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள்” என்று கூறி அழுதிருக்கிறார்.

மேலும் படிக்க – 60 வருட உழைப்பு.. சிங்கப்பூரில் வேலையே இல்லாமல் தத்தளித்து… இன்று சிங்கையையே கட்டி ஆளும் ஒரு “தமிழனின்” குடும்பம்! – பேரைச் சொன்னால் இந்திய பிரதமருக்கும் தெரியும்!

அனைத்தையும் முழுதாக கேட்ட விமலா, நித்யஸ்ரீயை சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டார். கணவரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். சோகமாகவும் இருந்திருக்கிறார். இதுகுறித்து மனைவியிடம் கல்யாண் விசாரித்த போது தான், ‘உங்களது முன்னாள் காதலி என்னை வந்து சந்தித்துவிட்டு போனார்’ என்ற உண்மையை கூறியிருக்கிறார். கல்யாணும், நித்யஸ்ரீ சொன்னது அத்தனையும் உண்மை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஒரு வினோத முடிவுக்கு வந்த விமலா, தனது கணவருக்கு அப்பெண்ணுடன் 2வது திருமணம் பசெய்து வைக்க முடிவு செய்தார். நித்யஸ்ரீயை அழைத்து பேச, அவர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்க, கல்யாணும் சம்மதம் தெரிவிக்க, தனது கணவனுக்கு தானே முன்னின்று இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணத்துக்கு முன்பு, ‘நானும் உங்களுடன் தான் இருப்பேன்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.

இவரை புரட்சிப் பெண் என்று கூறுவதா? அல்லது முட்டாள்த்தனமான முடிவு எடுத்துவிட்டார் என்று கூறுவதா? என்பதை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறோம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts