TamilSaaga

“அமெரிக்காவில் பயில இந்திய மாணவர்களுக்கு விசா” – ஜோபைடன் நிர்வாகத்திடம் வலியுறுத்தும் எம்.பிகள்

உலக அளவில் பட்டப் படிப்புகளை பயில அமெரிக்காவிலுள்ள பல பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாடுகின்றனர். இந்நிலையில் இந்திய மாணவர்களும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தங்களுடைய பட்டப்படிப்புகளை பயில அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக தங்களுடைய விசாகளையும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தங்களுடைய பட்டப்படிப்புகளை பயின்று வருகின்றனர்.

இதனிடையே உலக அளவில் கிருமி பரவல் காரணமாக விசா நடைமுறையில் பல கெடுபிடிகளை அமெரிக்கா தற்பொழுது கடைப்பிடித்து வருகின்றது. இதனால் இந்திய மாணவர்கள் உள்பட பல வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவுக்கு தங்கள் படிப்புகளுக்காக விசாக்களை விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் விசாக்களில் பல கட்டுப்பாடுகளையும் அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இருப்பினும் அடுத்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்க மாணவர்கள் விசா விண்ணப்பம் செய்ய இன்னும் முழுமையாக எந்த செயல்பாடும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கும் விசா வழங்கும் செயல்முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தை அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts