நேற்று தமிழக முழுவதும், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் அண்ணாந்து பார்த்த ஒரு விஷயம் சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி. ஜாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து இந்தியர் என்று வரும்பொழுது ஒன்றாகி போய் அனைத்து மக்களின் முகத்திலும் நாமே சாதித்தை போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அதைவிட இரவு பகல் பாராமல் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்த பொழுது நம் கண்களின் ஆனந்த கண்ணீர் வரத்தான் செய்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பாரத பிரதமர் தேசிய கொடியை அசைத்து வெற்றினை பகிர்ந்த பொழுது காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிரதமர் கூறியதைப் போன்று, இந்திய வரலாற்றில் நேற்றைய நாளானது என்றும் நிலைத்து நிற்கும். இந்த வெற்றியை தமிழகம் மற்றும் அல்லாமல் உலகெங்கிலும் இருந்த தமிழர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர். அப்படி இருக்கும் பொழுது தமிழர்கள் நிறைந்த சிங்கப்பூர் பகுதியில் சொல்லவா வேண்டும்.
அதற்கும் ஒரு படி மேலே போய், சிங்கப்பூரில் உள்ள L-qube Ptd என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கேக் வெட்டி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளனர். இந்தியாவின் வெற்றியை சிங்கப்பூரில் கொண்டாடுகின்றோம். வாழ்க இந்தியா! ஜெய்ஹிந்த்! என்ற கரகோஷத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படத்தை பகிர்ந்து, அவர்கள் சந்தோஷத்தை உலகறிய செய்ய வேண்டும் என்று நம்மிடம் கோரிக்கை விடுத்ததன் சார்பாக இந்த பதிவு உங்களுக்காக எழுதப்பட்டுள்ளது. இன்னும் இதுபோல விண்ணில் பல சாதனைகளை இந்தியா படைக்க “தமிழ் சாகா சிங்கப்பூரின்” சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இதற்காக அயராது உழைத்த விஞ்ஞானிகளுக்கு எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகின்றோம்!