TamilSaaga

15 நாட்களுக்கு பேங்க் லீவ்.. வாடிக்கையாளர்கள் உஷாரா இதெல்லாம் செஞ்சிடுங்க!

ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாட்கள் இருப்பதால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 நாட்கள் விடுமுறை பட்டியலில் 7 நாட்கள் வழக்கமான வார இறுதி விடுமுறையாகும். மற்ற எட்டு நாட்களும் ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்களாகும். வங்கிகளின் விடுமுறை தினம் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எங்கெல்லாம் பொருந்தாது?

இந்த விடுமுறை அனைத்தும் நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்படாது.

குறிப்பிட்ட மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை கணக்கிடப்படும்.

ஆகஸ்ட் 19 அன்று, முஹர்ரம் (அசூரா) பண்டிகை . அன்றைய தினத்தில் மொத்தம் 17 நகரங்களில் வங்களுக்கு விடுமுறை. இதனைத்தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி, குரு ஜெயந்தி, 2 ஆவது சனிக்கிழமை, ஞாயிறு, திருவோணம் என அடுத்தடுத்து பண்டிகை நாட்களும் விடுமுறை நாட்களும் தொடர்வதால் வங்கிகள் அடுத்தடுத்து விடுமுறையை பெறுகின்றனர்.

இதனால் வங்கி ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் வாடிக்கையாளர்களின் நிலைமை தான் திண்டாட்டம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

  1. பணத்தை டெபாசிட் செய்ய அல்லது டெபிட் செய்ய முன்பே திட்ட்டமிடுங்கள்.
  2. 2. தேவையான பணத்தை முன்பே ஏடிஎம் சென்று எடுத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் அலச்சல் மற்றும் நெரிசலை தவிர்த்திடுங்கள்.
  3. 3. ஆன்லைன் பேமேண்டை முடிந்தவரை பயன்படுத்துங்கள்.
  4. 4. வங்கிகள் செயல்படும் நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
  5. 6. வங்கி தொடர்பான எந்த ஒரு போலி மெசேஜ்களையும் கண்டு பணத்தை எடுக்கவோ பரிமாற்றவோ முயற்சிக்காதீர்கள்.
  6. 7. செக் டெபாசிட் செய்ய வேண்டிய தேவை இருந்தால் அதை விடுமுறை நாட்களுக்கு முன்னரே செய்து முடித்து விடுங்கள்
  7. 8. அதே போல் விடுமுறை காலங்களிலும் ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவையும் 24*7 செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts