அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை முட்டை ஏற்றுமதி என்பது ஒரு பிரதான வியாபாரமாக இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் 15 கோடி முட்டைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
ஏற்றுமதியை தடுத்த கொரோனா
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா உலகெங்கும் பரவிய நிலையில், தமிழகத்தின் முட்டை ஏற்றுமதியும் பெரிய அளவில் சரிந்தது. மாதம் ஒன்றுக்கு வெறும் 2 கோடி முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் முட்டை தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் முட்டை ஏற்றுமதி தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அதன் விளைவாக இப்பொது மாதம் ஒன்றுக்கு சுமார் 15 கோடி முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது தமிழகம். அதிலும் குறிப்பாக இப்பொது அமெரிக்கா அளித்துள்ள ஒரு அனுமதி, முட்டை வியாபாரிகளை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது.
அமெரிக்கா கொடுத்த க்ரீன் சிக்னல்
தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலங்களாக இருக்கும் கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு முட்டையை ஏற்றுமதி செய்துவருகிறது. தமிழகத்தில் பரவலாக இருக்கும் இலவச மதிய உணவு திட்டத்திற்கும் பெருமளவில் முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுப்பப்படுகிறது.
இது மட்டுமல்ல மாதத்திற்கு சுமார் 15 கோடி முட்டைகளை இலங்கை, மலேசியா, ஓமன், கத்தார், துபாய் மஸ்கட் மற்றும் இன்னும் பல அரபு நாடுகளுக்கு தமிழகம் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த சூழலில் முதல் முறையாக சுமார் 21 குளிர்சாதன வசதி கொண்ட கண்டைனர்களில், ஒரு கோடி முட்டைகள் நாமக்கலில் இருந்து அமெரிக்காவிற்கு இப்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றிகரமாக அமெரிக்கா சென்றடையும் என்றும் வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் Dependant’s Pass – யாருக்கெல்லாம் கிடைக்கும்? வழிமுறைகள் என்ன?
இதுவரை இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு அனுமதியை மறுத்து வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே முதல் முறையாக நாமக்கலில் இருந்து ஒரு கோடி முட்டைகளை அமெரிக்கா வாங்கியுள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த ஏற்றுமதி அளவானது வெகுவாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.