TamilSaaga
kerala girl murder

ஒரு நொடி தான்.. லவ்வுக்கு நோ சொன்ன மருத்துவ மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர்

இன்ஸ்டாவில் காதலைச் சொல்ல, அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மருத்துவ மாணவி அந்நியாயமாக சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் அடுத்தப்படியான் இந்த இன்ஸ்டா ரீல்ஸ் இளைஞர்களை படாதபாடு படுத்துகிறது. வித விதமான பாடல்கள், ஃபோட்டோ ஷூட் என இன்ஸ்டா பக்கம் போனாலே இவங்க தொல்லை தாங்க முடியல. இப்படிப்பட்ட இன்ஸ்டாவில் மருத்துவ மாணவியை பார்த்து கண்டதும் காதல். கொலை.. தற்கொலை என சென்றுள்ளார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராஹில்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மானஷா இந்திரா காந்தி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இவர் தன்னுடைய தோழிகளுடன் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு வீட்டின் மேல் பகுதியில் அறை எடுத்து வசித்துவந்தார்.

மானஷாவும் ராஹிலும் இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகி வந்தனர் பின்னர் ராஹிலின் நட்பைத் துண்டித்திருக்கிறார் மானஷா. ஆனால் ராஹில் காதல்வலை வீசி, தொடர்ச்சியாக மானஷாவுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் ராஹிலைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார் மானஷா. ராஹிலின் தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் மானஷா தங்கியிருந்த அறைக்கு ராஹில் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் மானஷா தங்கியிருந்த அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது மானஷாவும் ராஹிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதைப் பார்த்து மற்ற மாணவிகள் அலறிக்கொண்டே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

போலீசார் இரண்டுபேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர்.

ராஹிலுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவி கொலைசெய்யப்பட்ட சம்பவம் கேரளத்தை உலுக்கியுள்ளது.

Related posts