நடிகை ஷகிலா என்றாலே வேறுஒரு கண்ணோட்டத்தில் பார்த்த பலரை, அதிலிருந்து 100க்கு 200 சதவிகிதம் மாற்றி, அவரை ஒரு சிறந்த கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த பெருமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியையே சேரும் என்றால் அது சற்றும் மிகையல்ல.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹிட்டான ஒரு ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. புகழ், பாலா, ஷிவாங்கி போன்ற பல திறமையாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்த இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார் பிரபல நடிகை ஷகிலா.
இந்நிலையில் நடிகை ஷகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5ம் பாகத்தில் பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் மிலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய ரசிகர் ஒருவர், ‘நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் [பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையா’ என்று கேட்க. அதற்கு மிலா, நான் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற வகையில் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து நடிகை ஷகிலாவின் மகள் மிலா, பிக் பாஸ் 5வது சீசனில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மேலும் பிக் பாஸ் 5ம் பாகத்தை பிரபல நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்குவார் என்ற தகவலும் இணையத்தில் வலம்வருகின்றது.